← Back to list
தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்தது சிங்கப்பூர்! மலேசியர்களுக்கு இனி ஏழு நாட்கள் மட்டுமே!
Aug 22, 2020
COVID-19 கிருமித் தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான தனிமைப்படுத்திக் கொள்ளும் கால அவகாசம், 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த கிருமித் தொற்று அபாயம் குறைவாக காணப்படும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
எனவே அடுத்த மாதம் தொடங்கி, சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்கள் ஏழு நாட்கள் மட்டுமே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மலேசியா தவிர்த்து சீனா, Macau, Vietnam, Australia-வில் Victoria தவிர்த்து இதர அனைத்துப் பகுதிகளில் இருந்து வருவோருக்கும் அந்த ஏழு நாட்கள் விதிமுறை பொருந்தும் என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
Maju Cluster: நெருங்கிய தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!
KL, Titiwangsa-வில் உணவகம் ஒன்றை உட்படுத்தி உருவாகியுள்ள Maju எனும் புதிய cluster-ருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
அந்த cluster-ரின் கீழ், இதுவரை உணவகப் பணியாளர்கள் மற்றும் 600க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் என 672 பேர் வரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் உணவகப் பணியாளர்கள் இருவர் உட்பட மூவருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றுப் பதிவான 9 புதிய COVID-19 சம்பவங்களில், அம்மூன்று சம்பவங்களும் அடங்கும்.
நேற்று 13 பேர் முழுமையாக உடல் நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இன்னும் 179 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Pink Tag அணிந்த France நாட்டவர், தனிமைப்படுத்தும் மையத்தில் இருக்கின்றார்!
அண்மையில், கையில் இளஞ்சிவப்பு நிற tag-குடன் Langkawi அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த, France நாட்டுக்காரர் ஒருவர் லங்காவியில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பட்டுள்ளார்.
முன்னதாக, KLIA விமான நிலையம் வந்திறங்கிய அவ்வாடவர் மீதான COVID-19 பரிசோதனையில் அவருக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் உள்ளூர் விமானம் வாயிலாக லங்காவிக்கு தனதுப் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
மலேசியா எனது இரண்டாவது இல்லம் திட்டத்தைச் சேர்ந்த அவருக்கு, SOP-களை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், அதே நாள் இரவு அந்த 64 வயது முதியவர் kuarantin மையத்திற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சு கூறியது.
ஜூலை 24 ஆம் தேதியில் இருந்து, நாட்டின் எல்லைக்குள் நுழையும் ஒவ்வொருவரும், நிர்ணயிக்கப்பட்டுள்ள kuarantin மையங்களில் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
COVID-19: இன்னும் ஈராண்டுக்குள் முடிவுக்கு வந்து விடும்!
COVID-19 பெருந்தொற்று, ஈராண்டுகளுக்கும் குறைவான காலக்கட்டத்திற்குள், ஒரு முடிவுக்கு வரும் என உலக சுகாதார நிறுவனம் WHO நம்பிக்கை தெரிவித்துள்ளது!
உலகமயமாதல் காரணமாக அத்தொற்று மிகத் தீவிரமாக பரவி வந்தாலும், நடப்புச் சூழ்நிலையில் உள்ள தொழில்நுட்பம் வாயிலாக அக்கிருமித் தொற்றை குறுகிய காலத்தில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என WHO கூறியது.
இதற்கு முன் 1918ஆம் ஆண்டில் உலகை அச்சுறுத்திய Spanish Flu பரவலை, WHO சுட்டிக் காட்டியது.
அந்த வைரஸ் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பரவியுள்ள கொரோனா வைரசை சீக்கிரமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என WHO தெரிவித்தது.
அந்த வைரஸ் ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு நீடித்தது; அதன் பின்னரே அப்பாதிப்பில் இருந்து உலகம் மெல்ல மீண்டு, பழைய நிலைக்கு திரும்பியதாக WHO குறிப்பிட்டது.
Spanish Flu காரணமாக குறைந்தது 50 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;
தற்போது பரவியுள்ள COVID-19 காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக WHO கூறியது.
தாய்லாந்தில் அவசர நிலை நீட்டிப்பு!
COVID-19-னை கட்டுப்படுத்த, தாய்லாந்து ஐந்தாவது முறையாக அவசரக் கால நிலையை, செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கவிருக்கின்றது.
தாய்லாந்தில் இதுவரை மூவாயிரத்து 390 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; 58 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா சம்பவங்கள்!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 7 லட்சம் பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பட்டார்!
அனைத்துலக செய்தி நிறுவனமொன்றின் சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தில், மலேசியாவைப் பற்றி அடிப்படையற்ற தகவல்கள் கொடுத்துப் பேட்டியளித்த வங்காளதேச ஆடவர், நேற்றிரவு தனது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பட்டார்.
அந்த 25 வயது ஆடவர் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய முடியாதவாறு கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather