Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுவாசக் கவசம் அணியாவிடில், கட்டங்கட்டமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும்!

Aug 19, 2020


சுவாசக் கவசம் அணியாதவர்களுக்கு, கட்டம் கட்டமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற Bandar Kuching MP, DR Kelvin Yii-யின் பரிந்துரையை, மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது.


சுவாசக் கவசம் அணியும் விதிமுறை கட்டாயம் என்றாலும், அதன் அமுலாக்கம் நியாயமானதாக இருக்க வேண்டும் என அச்சங்கத் தலைவர் DR N ஞானபாஸ்கரன் கூறினார். 


சுவாசக் கவசம் அணியும் விதிமுறையை மீறுவோருக்கு ஒரேடியாக ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதற்கு பதிலாக, 250 ரிங்கிட்டில் இருந்து அந்த அபாரத்தை தொடங்கலாம் என Dr Kelvin முன்னதாக பரிந்துரைத்திருந்தார்.

கெடா மாநிலம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலை, சுகாதார துறை தலைமை இயக்குநர் மறுத்துள்ளார்.

சிவப்பு மண்டலம் என்பது ஒரு மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுமே தவிர, அது மாநிலத்தைப் பொறுத்தது அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.

அப்படியே பார்த்தாலும், கெடாவில், இதுவரை எந்த மாவட்டங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அங்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள பெரும்பாலான பகுதிகள் இன்னும் மஞ்சள் மண்டலங்களாகவே இருப்பதாக அவர் சொன்னார்.

கெடாவில், சிவகங்கை, Tawar, Sala, Muda ஆகிய cluster-கள் பதிவாகியுள்ளன.

ஆகக் கடைசியாக Tawar Cluster-ரை உட்படுத்தி Kulim-மில் உள்ள பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில், எந்த காவல் துறை அதிகாரிகளும் சட்டவிரோத சூதாட்ட கும்பல்களின் கட்டுப்பாட்டில் இல்லை என, தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador கூறியிருக்கின்றார்.


காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை உட்படுத்திய பணி இட மாற்ற விவகாரங்களில், அத்தரப்பினரின் தலையீடு இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்ற தகவல் என்றும் IGP சொன்னார்.


சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் தமது தரப்பு ஒருபோது கரிசனம் காட்டாது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.



பினாங்கில், 17 வயது மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை பொதுவில் அம்பலப்படுத்தப் போவதாக கூறி, அம்மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் 20 வயது இளைஞன் மீது இன்று Balik Pulau Magistrate நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞன், கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர், பேரா உள்ளிட்ட இதர சில மாநிலங்களிலும் இதே போன்று, இணையம் வழி தனக்கு அறிமுகமானவர்களை மிரட்டி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 


அதிகாலை இந்தோனிசியாவின் தெற்கு சுமத்ராவில், ஆறு நிமிடங்கள் இடைவெளியில் ரிக்டர் அளவைக் கருவியில், 6.8 மற்றும் 6.9ஆகப் பதிவாகிய இரட்டை நிலநடுக்கம் உலுக்கியது.
எனினும், அதனால் மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather