← Back to list
கெடாவில் மேலுமொரு புதிய cluster!
Aug 14, 2020
கெடா மாநிலத்தில் மேலும் ஒரு புதிய cluster சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
அது Muda cluster என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
அங்கு இதுவரை இருவருக்கு Covid-19 பீடித்துள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதலில் காவல் வீரரான உள்நாட்டு ஆடவருக்கு அக்கிருமித் தொற்று உறுதிச் செய்யப்பட்டது.
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 20 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 13 உள்நாட்டில் பரவியதாகும்.
அந்த 13 சம்பவங்களில் 11 Tawar cluster தொடர்புடையவை.
மேலும் எழுவர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டு பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக மரணம் பதிவாகவில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆக நீடிக்கிறது.
கெடாவில் Tawar அருகேயுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மக்களுக்கு இன்று Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tawarரில் புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்ததை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த புதிய clusterரில் முதல் சம்பவம், வணிகரான உள்நாட்டு ஆடவரை உட்படுத்தியதாகும்.
அந்நபர் அண்மையில் மரணமடைந்த தமது குடும்ப உறுப்பினரின் சமய நிகழ்வில் கலந்து கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
கெடா, Napohவைச் சேர்ந்த மக்களும் கடை உரிமையாளர்களும் nasi kandar உணவக உரிமையாளருக்கு எதிராக 1 மில்லியன் தொகையிலான சம்மனைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
அப்பகுதியில் சிவகங்கை cluster உருவாகி Covid-19 சம்பவங்கள் அதிகரித்ததால், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டைக் கோரும் வகையில் அவர்கள் அவ்வாறு செய்யவிருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து திரும்பிய பிறகு 14 நாட்களுக்குத் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதை அடுத்து அந்த nasi kandar உணவக உரிமையாளருக்கு நேற்று ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கெடாவில், சிவகங்கை Cluster சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் நான்கு மழலையர் பள்ளிகள் உட்பட 139 பாலர் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அவற்றில் ஈராயிரத்து எழுநூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சிவகங்கை cluster தொடர்புடைய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பேரா-கெடா மாநில எல்லைகளை மூடியிருப்பதாகக் கூறப்படுவதை காவல் துறை மறுத்துள்ளது.
மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறி பரப்பப்பட்டுள்ள புகைப்படம், உண்மையில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்டது என அது தெளிவுபடுத்தியது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 203 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 44 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
159 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
பேரா, Slim சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி நாளை நடைபெறும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் புடை சூழ வரக்கூடாது.
வேட்பாளர், அவரை முன் மொழிபவர், ஓர் ஆதரவாளர் என மூவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் மையத்தில் நுழைய அனுமதிக்கப்படுவர்.
அதே சமயம் வேட்பு மனுத் தாக்கல் நெடுகிலும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் SPR நினைவுறுத்தியது.
Slim இடைத் தேர்தல் இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95 மற்றும் RON97 பெட்ரோல் விலை 5 சென் அதிகரிக்கிறது.
அவ்வகையில் RON 95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 68 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு 1 ரிங்கிட் 98 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் 3 சென் உயர்ந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 82 சென்னாகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather