← Back to list
நஜீப் வழக்கன்று திரண்ட கூட்டம்! cluster இல்லை!
Aug 14, 2020
16 நாட்களுக்கு முன், முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மீதான SRC International வழக்கின் போது, KL உயர்நீதிமன்றத்தில் திரண்ட ஆயிரத்திற்கும் அதிகமான அவரது ஆதரவாளர்களை உட்படுத்தி, COVID-19 சம்பவம் எதுவும் பதிவாகவில்லை!
அப்பேரளவிலான கூட்டத்தின் வாயிலாக புதிய cluster எதுவும் ஏற்படவில்லை என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
"Memang kita tidak nampak peningkatan kes secara mendadak dan kita ada ialah mungkin perhimpunan semasa Hari Raya Aidiladha iaitu PUI Sivaganga dan juga PUI kulster Kurau dan juga mungkin Meranti dan ada terkini ialah kluster"
முன்னதாக வழக்கு நாளான்று, நஜீப்பின் ஆதரவாளர்கள் கூடல் இடைவெளியை மறந்து நீதிமன்றத்திற்கு வெளியே பேரளவில் திரண்டதை கண்டித்து, பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பியிருந்தனர்.
அக்கூட்டம் வாயிலாக புதிய cluster உருவாகி விடுமோ என்ற அச்சம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
மாணவருக்கு தொற்று இல்லை!
KL Lembah Pantai-யில் COVID-19 பீடித்திருப்பதாக கூறப்பட்ட இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு அத்தொற்று இல்லை என்பது, இரு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் நெருங்கிய தொடர்புடைய 54 பேருக்கும் அத்தொற்று இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக, Dr Noor Hisham சொன்னார்.
நாட்டில் புதிதாக 15 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளை, நால்வர் முழுமையாக குணமடைந்தனர்.
இன்னும் 183 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதரச் செய்திகள்....
TEMCO பகுதியில் தம்பதி கைது!
கெடா Padang Terap-பில், கையில் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற tag-கை அகற்றி விட்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேறி கடைக்குச் சென்ற 50 வயது மதிக்கத்தக்க தம்பதியர் கைதாகியிருக்கின்றனர்.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், கூடியபட்சம் ஆறு மாதங்கள் சிறை, அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம் என மாவட்ட காவல் துறை கூறியுள்ளது.
மரணங்கள் எண்ணிக்கையில் இந்தியா 4ஆவது இடம்!
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் COVID-19 தொற்றுக்கு தொள்ளாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, அமெரிக்கா, Brazil, Mexico ஆகிய நாடுகளை அடுத்து, ஆக அதிக மரணங்களை பதிவுச் செய்த 4ஆவது நாடாக இந்தியா திகழ்கின்றது.
நேப்பாள பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு!
KL-லில் சக நாட்டவரால் சரமாரியாக தாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் ஒருவர், இரு வேறு சம்பவங்களில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் தம்மீதான அவ்விரு குற்றாச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியதாக FMT கூறுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather