Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உருட்டல் மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது - IGP எச்சரிக்கை!

Aug 13, 2020


குண்டர் கும்பல் சார்ந்த எந்த நடவடிக்கையானாலும், சமரசம் என்றப் பேச்சுக்கே இடமில்லை என தேசிய காவல் படைத் தலைவர் எச்சரித்துள்ளார்!

குற்றச்செயல்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, காவல் துறைக்கு தகவல் கொடுப்போரை, குண்டர் கும்பல்கள் மிரட்டும் நடவடிக்கைகளும் அதிலடங்கும் என Tan Sri Abdul Hamid Bador தெரிவித்தார்.

"Saya beri amaran di sini baik di kalangan sindiket sindiket judi ataupun di kalangan gangster yang cuba nak menganiayi atau nak menakut nakut atau mengugut sesiapa sahaja la yang bakal tampil berkongsi maklumat dengan PDRM tentang perlakuan kejadian kejadian jenayah ini... sya beri amaran ... jangan buat begitu."

சிலாங்கூர் Sungai Buloh-வில், சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய தன்னை, குண்டர் கும்பல் உறுப்பினர்கள் மிரட்டுவதாக ஆடவர் ஒருவர் கூறியுள்ள புகார் தொடர்பில் IGP பேசினார்.

இவ்வேளையில், Bandar Baru Sungai Buloh பகுதியில் அனுமதியின்றி தங்களது கடைகளை விரிவாக்கம் செய்தது தொடர்பில் இதுவரை 100 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாளிகள் கவனம்! மனித வள அமைச்சு எச்சரிக்கை!

COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், சில முதலாளிகள், ஆள்பலத் துறையிடம் அறிவிக்காமலேயே தொழிலாளர்களை பணி நீக்கும் சம்பவங்கள் கவலையளிப்பதாக, மனித வள அமைச்சு கூறியுள்ளது.

இதையடுத்து, தங்களது தொழிலாளர்களின் வேலை நீக்கம் அல்லது சம்பளக் குறைப்புப் பற்றிய தகவலை அத்துறைக்கு அனுப்பத் தவறும் முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் Datuk Seri M Saravanan எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாக கூறிய அவர், யாருக்கு கரிசணம் காட்டப்படாது என்றார்.

தொழிலாளர்களை நிரந்தரமாக, தற்காலிகமாக அல்லது அவர்களது சுய விருப்பத்தின் பேரில் பணி நீக்கினாலோ அல்லது சம்பளக் குறைப்பைச் செய்தாலோ, அதற்கான பாரத்தை குறைந்தது 30 நாட்களுக்கு முன்பாகவே முதலாளிகள் ஆள்பலத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூலை மாதம் வரைக்குமான தரவுகளின் படி, அத்தகைய 44 ஆயிரத்திற்கும் அதிகமான பாரங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

ஆனால், வேலைக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

மற்றொரு நிலவரத்தில், சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசியர்கள், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக பெற்றுக் கொள்ள, MYFutureJobs எனும் அகப்பக்கத்தில் பதிந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இணையம் வாயிலாக அல்லது SOCSO அலுவலகங்களில் அதற்கு பதிந்துக் கொள்ளலாம் என மனித வள அமைச்சு கூறியுள்ளது.

வேலை வாய்ப்பு, தொழில் ஆலோசனை ஆகிய சேவைகள் அதில் வழங்கப்படுகின்றன.

பினாங்கு மாநில முதல் அமைச்சர் அதிரடி!

கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதில், பினாங்கு மாநில அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

ஒரு கட்சியில் உறுப்பியம் ரத்துச் செய்யப்பட்ட அல்லது வேறுக் கட்சிக்கு தாவி விட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் பதவியை காலி செய்ய வேண்டும் என்ற மாநில அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அத்தீர்மானம் கொண்டு வரப்படவிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அக்டோபரில் அத்தீர்மானம் கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மகாதீரின் புதுக் கட்சி!

தமது புதியக் கட்சிப் பெயர் PEJUANG என அறிவித்துள்ள முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad, Perak, Slim சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலில்  வழக்கறிஞர் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

எனினும், மகாதீரின் அப்புதிய கட்சி இன்னும் பதிவுச் செய்யப்படவில்லை என்பதால், அந்த இடைத்தேர்தலில் Amir Khusyairi Mohamad Tanus எனும் அவ்வேட்பாளர் சுயேச்சையாக களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கலவரம்!

இந்தியா பெங்களூருவில், முகநூலில் பதிவேற்றப்பட்ட மத அடிப்படையிலான சர்ச்சைக்குரிய பதிவின் காரணமாக அதன் வடக்குப் பகுதிகளில் இரவோடு இரவாக கலவரம் வெடித்துள்ளது.

Image: BBC

சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது காவல் துறை தனது நடவடிக்கையை தாமதப்படுத்துவதாக கூறி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல் ஒன்று, காவல் நிலையத்தை தாக்கி, சில வாகனங்களுக்கும் தீ வைத்தது.

நிலைமையை கட்டுப்படுத்த காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது; இந்நிலவரத்தை அடுத்து அங்கு 144 ரடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த இயக்குநர்!

பாகுபலி' திரைப்படப் புகழ் இயக்குநர் S.ராஜமவுலி, COVID-19 கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

14 நாட்களுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அத்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் tweet செய்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather