Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கெடாவில் புதிய cluster!

Aug 13, 2020


கெடாவில், புதிதாக மேலும் ஒரு cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த Tawar clusterரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு Covid-19 தொற்றியிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

"Kes pertama kluster ini adalah lelaki warganegara Malaysia yang mempunyai sejarah menghadiri upacara keagamaan memperingati kematian ahli keluarga dianggarkan dihadiri 30 orang"

இவ்வேளையில், Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 15 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 11 உள்நாட்டில் பரவியதாகும்.

மேலும் நால்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை.

மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.

Covid-19 கிருமித் தொற்றுக்கான தடுப்பூசியை வாங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருப்பதை அடுத்து தற்காப்பு அமைச்சர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

எந்த முடிவையும் எடுக்கும் முன் சுகாதார அமைச்சு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

"Banyak negara sekarang telah claim bahawa mereka telah jumpa vaccine. Tetapi sejauh mana boleh digunakan, sejauh mana berjaya, dan sebagainya saya percaya Kementerian Kesihatan akan membuat kajian"

மற்றொரு நிலவரத்தில், மலேசியாவில் நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டவர்கள், இங்கு வந்ததடைந்ததும் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சொன்னார்.

அதோடு அவர்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்றாரவர்.

3 ply எனும் மூன்று அடுக்குகளைக் கொண்ட சுவாசக் கவசத்தை ஒரு ரிங்கிட்டுக்கு மேல் விற்கும் வணிகர்களுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

வரும் சனிக்கிழமையில் இருந்து 3 ply சுவாசக் கவசத்தின் உச்ச வரம்பு விலை 1 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டு அதன் விற்பனை அமலுக்கு வருகிறது.

அந்த உச்ச வரம்பு விலையை அனைத்து வணிகர்களும் பின்பற்ற வேண்டும் என அமைச்சு நினைவுறுத்தியது.  

கெடா, Napohவில் சிவகங்கை cluster சம்பவத்துடன் தொடர்ப்புப்படுத்தப்படும் nasi kandar உணவக உரிமையாளருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து திரும்பிய பிறகு 14 நாட்களுக்குத் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து அத்தண்டனை வழங்கப்பட்டது.

சிவகங்கை clusterரில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், கெடாவில் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெடாவில், 21 பகுதிகள் Covid-19 சம்பவங்கள் அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையில்லை.

அத்தகவல் அடிப்படையற்றது என தேசிய பாதுகாப்பு மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather