← Back to list
Lembah Pantaiயில் Covid-19? விசாரிக்கப்படுகிறது!
Aug 12, 2020
KL, Lembah Pantaiயில் இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து சுகாதார அமைச்சு விசாரித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அம்மாணவருக்கு டெங்கிக் காய்ச்சலுக்கான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு அக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 11 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று உள்நாட்டில் பரவியதாகும்.
மேலும் 8 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
மரண எண்ணிக்கை 125 ஆகவே இருக்கிறது.
கெடாவில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநில menteri besar ஆலோசனை கூறியிருக்கிறார்.
அது குறித்து விவரித்த Muhammad Sanusi Md Nor....
"Saya ingin ulangi bahawa saudara-saudara, adik-beradik kita yang berada di kawasan TEMCO di 3 lokasi di Kubang Pasu dan satu lokasi di Padang Terap tidak dibenarkan keluar lagi sehingga TEMCO itu ditarik balik. Harap bersabar"
சிவகங்கை cluster தொடர்பில் அதிகமான சம்பவங்கள் பதிவானதை அடுத்து அந்நான்கு பகுதிகளிலும் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து MCO கடுமையாக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் குன்றியிருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் வெவ்வேறான வகையில் சுவாசக் கவசத்தை அணியும் வழிமுறை குறித்து தாங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, சுகவீனமாக இருந்தாலும் சரி, வர்ணம் உள்ள பகுதி வெளியேயும் வெள்ளைப் பகுதி உட்புறமாகவும் இருக்கும்படிதான் சுவாசக் கவசத்தை அணிய வேண்டும் என அது தெளிவுபடுத்தியது.
இந்திராகாந்தியின் கணவர் தற்போது நாட்டில் இல்லை என நம்புவதாக உள்துறை அமைச்சு கூறியிருக்கிறது.
இஸ்லாத்துக்கு மாறி விட்டதோடு மூன்றாவது பிள்ளையைத் தம் வசம் வைத்திருக்கும் அவர், யாரும் தம்மைக் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக அடிக்கடி இடம் மாறுவதாக அது தெரிவித்தது.
Muhammad Ridzuan Abdullah தமது முகவரியில் குடியிருக்க வில்லை எனக் கூறிய அமைச்சு, அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்க குடிநுழைவுத்துறையில் அவரது பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது.
வாகனங்களில் சிறார்களுக்கான பாதுகாப்பு இருக்கையை இன்னும் பொருத்தாதவர்களுக்கு இவ்வாண்டு இறுதி வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது.
சிறார்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய பாதுகாப்பு இருக்கையின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதில்தான் தற்போதைக்கு முக்கியத்துவம் செலுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு கூறியது.
அண்மையில் புதிய கட்சியை அறிவித்த முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad, அக்கட்சிக்கு PEJUANG எனப் பெயரிட்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather