Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுவாசக் கவசத்தின் விலை மேலும் குறைகிறது!

Aug 11, 2020


நாட்டில் Covid-19 கிருமித் தொற்று தொடர்பில் புதிதாகப் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை ஓரிலத்திற்குத் திரும்பியுள்ளது.

புதிதாக 9 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் நான்கு உள்நாட்டில் பரவியதாகும்.

மேலும் அறுவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது. 

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, சுவாசக் கவசத்தின் விலை மேலும் குறைக்கப்படுவதாக உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.

அதன் உச்ச வரம்பு விலை ஒரு ரிங்கிட் 20 சென்னில் இருந்து ஒரு ரிங்கிட்டுக்குக் குறைக்கப்படுகிறது.

பொது இடங்களிலும் பொது போக்குவரத்துகளிலும் சுவாசக் கவசம் கட்டாயம் அணிவது ஆகஸ்ட் முதல் தேதியில் அமலுக்கு வந்ததை அடுத்து, அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் Datuk Alexander Nanta Linggi தெரிவித்தார்.  

அதே சமயம் நாட்டில் சுவாசக் கவசங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.

கெடா, சிவகங்கை clusterருடன் தொடர்புடைய உறுதிப்படுத்தப்பட்ட Covid-19 சம்பவம் Ayer Molekக்கில் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுவதை மலாக்கா மாநில சுகாதாரத்துறை மறுத்திருக்கிறது.

அச்சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

முன்னதாக சிவகங்கை clusterருடன் தொடர்புடைய சம்பவம் மலாக்காவில் பதிவாகியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாதுவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் WhatsAppப்பில் செய்தி பரவியிருந்தது.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 230 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 13 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

இருவர் காவல் துறையின் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர்.

215 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

பெரும்பாலானோர் இரவு நேர கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டது, SOPயைப் பின்பற்றாதது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட வர்த்தளத் தளங்களைத் திறந்து வைத்திருந்தது, சுவாசக் கவசம் அணியாதது, கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டனர். 

கெடா, Kulimமில் சுகாதார அமைச்சின் பணியாளர் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாடவரும் அவரது இரு நண்பர்களும் மாது ஒருவரை அணுகி கைப்பையை அபகரிக்கும் முன், Covid-19 மருத்துவ பரிசோதனை செய்யவிருப்பதாகக் கூறியதாக நம்பப்படுகிறது.

இறுதியாக அந்நபர் பிடிபட்டார்.

அவரது நண்பர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், Shah Alam மாநகர் மன்றத்தின் மூன்று அமலாக்கப் பணியாளர்களைக் கைது செய்துள்ளது.

அம்மூவரும் லைசன்ஸ் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த வத்தகத் தளங்களைப் பாதுகாக்க மாதந்தோறும் கையூட்டு வாங்கி வந்ததாக நம்பப்படுகிறது.

அந்நடவடிக்கை தொடர்பில் முன்னதாக காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா, Malimமில் பலத்த காற்று வீசியதை அடுத்து, சீனப் பள்ளியொன்றின் வகுப்பறைக் கூரை சரிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு மாணவர்கள் காயமுற்றனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather