← Back to list
மலேசியா- சிங்கப்பூர் எல்லையைக் கடக்க விண்ணப்பிக்கலாம்!
Aug 09, 2020
மலேசியா- சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் அனுமதிக்கான விண்ணப்ப நாள் நாளை தொடங்குகின்றது!
எனவே நாளை முதல் சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் நாடு திரும்ப விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
அதிகாரப்பூர்வ பணிகளுக்காக, சிறிது காலம் மலேசிய வர வேண்டிய, சிங்கபூரியர் உள்ளிட்ட அந்நிய நாட்டவர்களும், நாளை தொடங்கி விண்ணப்பிக்கலாம் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
மேல் விவரங்களுக்கு www.imi.gov.my.
_______
பெர்லிஸ், Sanglangகில் புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அங்குள்ள இரு பள்ளிகளை நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு மாணவர்களுக்கும் அத்தொற்று பீடித்துள்ள நிலையில், அந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில கல்விக்கான செயற்குழு தெரிவித்தது.
அப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் இணையம் வழி மேற்கொள்ளப்படும்.
_______
நேற்றிரவு தொடங்கி வருகின்ற செப்டபர் நான்காம் தேதி வரை பெர்லிஸ் Kuala Sanglangகில் நிர்வாக ரீதியிலான கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை TEMCO அமுலில் இருக்கும்.
அங்குள்ள இரு கிராமங்களில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வெளி இடங்களில் உள்ளவர்கள், அந்த TEMCO பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்படுகின்றது.
_______
இனிடையே இம்மாதம் 31ஆம் தேதியோடு முடிவடையவுள்ள மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலவரம் அண்மைய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவுக்கு முன்பு நடப்பு நிலவரம் கருத்தில் கொள்ளப்படும் என தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி தொடங்கிய RMCOவின் கீழ் முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
_______
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து ஐநூரு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
933 மரணங்களும் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather