← Back to list
குற்றச்சாட்டை மறுத்தார் Lim Guan Eng!
Aug 10, 2020
6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் தொடர்பில், பினாங்கு sessions நீதிமன்றத்தில் தம்மீது கொண்டு வரப்பட்ட அதிகார முறைகேடு குற்றச்சாட்டை Lim Guan Eng மறுத்துள்ளார்.
பினாங்கு மாநில முதலமைச்சராக இருந்த போது, அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிறுவனமொன்றுக்கு அத்திட்டத்திற்கான குத்தகையைப் பெற்றுத் தர 3.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை கையூட்டாக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த Bagan MP-க்கு அபராதமும், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
யார் எங்கே போட்டி என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை - Zahid
15-ஆவது பொதுத் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுவார்கள், எந்தத் தொகுதியில் அவர்கள் நிற்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என தேசிய முன்னணித் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்குத் திடீர் தேர்தல் வந்தால், தாம் இம்முறை Rembau MP தொகுதியில் போட்டியிடப் போவதாக, UMNO துணைத் தலைவரும் Negeri Sembilan முன்னாள் Menteri Besar-ருமான Datuk Seri Mohd Hassan முன்னதாகக் கூறியிருந்த நிலையில், Ahmad Zahid இவ்வாறு கூறியிருக்கிறார்.
Rembau தொகுதி தற்சமயம் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin வசம் இருக்கிறது.
அவர் Tampin நாடாளுமன்றத் தொகுதிக்கு மாறக் கூடுமென பேச்சு எழுந்துள்ளது.
பெர்லீசிஸ் மேலும் ஒரு பள்ளி மூடப்பட்டது!
COVID-19 பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள Kuala Sanglang-கில் மேலும் ஒரு பள்ளி, இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து Perlis-சில் இதுவரை மூன்றுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, நாட்டில் Perak மற்றும் Putrajaya-வை உட்படுத்திய இரு புதிய cluster-கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Perak-கில் Kurau cluster-ரின் கீழ் இருவருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளை, Putrajaya-வில் Meranti Cluster-ரின் கீழ் ஒருவர் அத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
நாட்டில் புதிதாக 13 சம்பவங்கள் பதிவான வேளை, 9 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்; இன்னும் 174 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாத் தொற்று நிலவரம்!
தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; சென்னையில் தொற்று குறைந்துள்ள போதிலும், பல மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
இவ்வேளையில், ஆந்திரப் பிரதேசத்தில், COVID-19 நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையில் தீப் பரவிய சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்து, 20 பேர் காயமடைந்துள்ளனர்.
Image: Telegraph India
இதற்கு முன் அகமதபாத்திலுள்ள COVID-19 மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், ஆகக் கடைசியாக மூன்றே வாரங்களில் கொரோனா மொத்த சம்பவங்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather