Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது!

Aug 07, 2020


Covid-19 தொடர்பில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஈரிலக்க எண்ணிலேயே பதிவாகியுள்ளது.

புதிதாக 25 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.

அந்த 16 சம்பவங்கள் கெடா, சிவகங்கை cluster, பெர்லிஸ், பினாங்கு, பேரா, KL, ஜொகூர் ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்டவை.

புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை.

மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கெடாவில் சிவகங்கை cluster சம்பவத்தை அடுத்து பெர்லிஸ் Sanglang பகுதியில் எண்ணூற்று 70க்கும் அதிகமானோருக்கு Covid-19 கிருமித் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அது குறித்து விளக்கிய மாநில menteri besar Datuk Seri Azlan Man .....

<Kita sekarang ini dalam usaha untuk mencegah, kita kenalpasti kemungkinan individu, jadi kita akan melakukan proses mengenalpasti di dua buah kampung iaitu Kampung Kuala Sanglang dan ini melibatkan 560 orang dan satu lagi di kampung tanah timbul yang ini melibatkan 312 orang>

பெர்லிசில் இதுவரை 11 பேருக்கு Covid-19 தொற்று பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Kuala Kurauவில் Covid-19 தொடர்பில் புதிய cluster சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக Facebookக்கில் செய்தி பதிவிட்ட நபரை பேரா காவல் துறை தேடி வருகிறது.

அத்தகவல் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அது கூறியது.

இவ்வேளையில், பினாங்கு, Butterworth, Jalan Chain Ferryயில் nasi kandar உணவகமொன்றின் ஊழியர் ஒருவருக்கு Covid-19 கிருமித் தொற்று பீடித்திருப்பதாக WhatsAppப்பில் அடிப்படையற்ற செய்தியைப் பரப்பிய நபரும் தேடப்பட்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad புதிய அரசியல் கட்சியை அறிவித்திருக்கிறார்.

எனினும் அக்கட்சியின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அக்கட்சிக்கு தமது புதல்வரும் கெடா மாநிலத்தின் முன்னாள் MBயுமான Datuk Seri Mukhriz Mahathir தலைவராக இருப்பார் என அவர் கூறினார்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95 பெட்ரோல் விலை 5 சென் சரிந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 63 சென்னுக்கு விற்கப்படும்.

RON97லும் 5 சென் இறங்கி லிட்டருக்கு 1 ரிங்கிட் 93 சென்னாகிறது.

டீசல் 4 சென் சரிந்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 79 சென்னுக்கு விற்கப்படும்.

பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் தொடர்பில் தம்மீது கொண்டு வரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என முன்னாள் நிதி அமைச்சர் Lim Guan Eng கூறியிருக்கிறார்.

குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய அவருக்கு நீதிமன்றம் இருவர் உத்தரவாதத்துடன் ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கியது.

மற்றொரு நிலவரத்தில் Guan Engங்கின் மனைவி துணைவியார் Betty Chew மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அவர் மீது அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather