Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உச்ச வரம்பு விலை மேலும் குறைக்கப்படலாம்!

Aug 06, 2020


சுவாசக் கவசத்தின் உச்சவரம்பு விலை ஒரு ரிங்கிட் 20 சென்னுக்கும் கீழ் குறைக்கப்படலாம்.

உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் Datuk Alexander Nanta Linggi தெரிவித்தார்.

நடப்பில் 1 ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்பட்டு வரும் சுவாசக் கவசம் இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து ஒரு ரிங்கிட் 20 சென்னுக்குக் குறைக்கப்படும் என ஏற்கனவே அமைச்சு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெர்லிசில் ஒரு கிலோகிராம் சிவப்பு மிளகாய் 30 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.

கடந்த மாதம் முதலே அவ்விலை ஏற்றம் காணப்படுவதாக Utusan தகவல் வெளியிட்டுள்ளது.

தேவை அதிகமாக இருப்பதோடு Covid-19னால் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். 

MySejahtera செயலி, பிற செயலிகள் மற்றும் எழுத்துப்பூர்வமாக புத்தகங்களில் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வதை விட பாதுகாப்பானது.

மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Dr. N. ஞானபாஸ்கரன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து வணிகத் தளங்களும் MySejahtera செயலியைப் பயன்படுத்துவதை அரசாங்கம் கட்டாயமாக்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

அச்செயலி Covid-19 தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களைத் தேட உதவியாக இருப்பதோடு வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதும் உறுதிச் செய்யப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மற்றொரு நிலவரத்தில் மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஏற்ப பினாங்கு மாநில அரசு நடப்பில் உள்ள 'Penang Contact Tracer' செயலி பயன்பாட்டை நிறுத்தி விட்டு MySejahtera செயலி பயனீட்டை அமலுக்குக் கொண்டு வர உத்தேசித்துள்ளது.

KL, Wangsa Majuவில் சக நாட்டவரால் தாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலரிடம் இருந்து அச்சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கம் பெறப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

நேப்பாளத் தூதரகத்தின் உதவியுடன் முன்னதாக அந்நபர் அடையாளம் காணப்பட்டதாக அது கூறியது.

அச்சம்பவம் மீதான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி, அப்பாதுகாவலரைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, மும்பையில் கடந்த இரு நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளது.

சாலைகளில் வெள்ளத்தில் கார்கள் கவிழ்ந்து கிடக்கின்றன; மரங்கள் முறிந்து விழுந்துள்ளன; சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியும் சேர்ந்து கொண்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்குமாறும் அநாவசியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather