← Back to list
மறைக்காதீர்- ஒன்பதாயிரத்தைத் தாண்டியது Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை!
Aug 03, 2020
Covid-19 தொற்று கண்டவருடனான தொடர்பு உள்ளிட்ட விஷியங்களை அதிகாரிகளிடமிருந்து மறைக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் Covid-19 சம்பவங்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்து ஒன்றாக பதிவாகியுள்ள நிலையில், ஆகக் கடைசியாகப் பதிவாகிய இரு சம்பவங்களும் உள்நாட்டில் பரவியவை என தெரிய வந்துள்ளது.
அதில் ஒன்றி சிவகங்கை Clusterரில் பதிவாகியிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
இதனிடையே Covid-19 தொற்று பீடித்தவர்களில் நால்வர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மரண சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.
_____
இதனிடையே கெடா, சிவகங்கை Cluster சம்பவத்தை முன்னிட்டு சுமார் 425 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ள வேளை, 42 பேர் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாக Dr Hisham தெரிவித்தார்.
______
கூட்டரசு நெடுஞ்சாலையில் சுவாசக் கவசம் அணியாததால் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை Bukit Aman மறுத்துள்ளது.
மாறாக மோட்டார் சைக்கிளுக்கான பாதையைப் பயன்படுத்தாத குற்றத்திற்காகவே சம்பந்தப்பட்ட ஆடவருக்கு அவ்வபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறை தெளிவுபடுத்தியது.
_____
சுவாசக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் நெரிசலான பொது இடங்களுக்கு மட்டுமே!
கூட்டம் இல்லாத இடங்களில் சுவாசக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதோடு தனியார் வாகனங்களில் சுவாசக் கவசம் அணிவதும் கட்டாயமல்ல என தெரிவித்த அமைச்சர், பொது போக்குவரத்துகளில் அது கட்டாயம் என்றார்.
______
இதனிடையே இந்தியா தமிழகத்தில் இன்று வரை Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இன்று மட்டும் ஐய்யாயிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றுக்கு ஆளாகியுள்ள வேளை, 98 பலியாகியுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather