Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கெடாவில் 5 பள்ளிகள் 28 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன!

Aug 03, 2020


கெடாவில் சிவகங்கை clusterருடன் தொடர்புடைய சம்பவங்களாக உணவகமொன்றுக்குச் சென்ற இரு வாடிக்கையாளர்களுக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்விருவர் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் சக ஊழியர் ஒருவருக்கும் அக்கிருமித் தொற்று பீடித்துள்ளது.

அவர்களில் இரு பள்ளி மாணவர்களும் அடங்குவர்.

அதனைத் தொடர்ந்து Kubang Pasuவிலும் Padang Terapப்பிலும் 5 பள்ளிகள் 28 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

அதே சமயம் மாநில அரசு நான்கு பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்குகிறது.  

சுவாசக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பலர் இன்னமும் அதனைப் புறக்கணித்து வருகின்றனர். 

சுவாசக் கவசம் அணியாதவர்களை அனுமதிக்காத சில வணிகர்கள், தங்களிடம் அது குறித்து தெரியப்படுத்தியிருப்பதாக சிலாங்கூர், PJ காவல் துறை கூறியிருக்கிறது.

பொது இடங்களில் குறிப்பாக கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத பகுதிகளில் பொதுமக்கள் சுவாசக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாகும்.

அது கடந்த சனிக்கிழமையில் இருந்து அமலுக்கு வந்தது.

தவறினால், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படலாம்.

சுவாசக் கவசம் அணிவது Covid-19 உட்பட சுவாசம் தொடர்புடைய கிருமித் தொற்று பரவலை ஓரளவு தடுக்க உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் WHO தெரிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் Amit Shahவுக்கு கொரோனா தொற்று பீடித்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில் Covid-19 கிருமித் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த Bollywood மூத்த நடிகர் Amitabh Bachchan, பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கூறுகிறது.

தாம் நலமடைய பிராத்தனை செய்த ரசிகர்களுக்கும் சிகிச்சையளித்த மருத்துவப் பணியாளர்களுக்கும் அவர் twitter வழி நன்றி தெரிவித்துக் கொண்டார்.   

மேலும் சில உள்நாட்டுச் செய்திகள்....

2021 வரவு செலவு அறிக்கையில் இளையோரை கல்வி உள்ளிட்ட துறைகளில் வெற்றி பெற வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆக்ககரப்படுத்தும். 

அதோடு நிதி நிர்வாகத்தில் இளையோரை மேம்படுத்தவும் உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என நிதியமைச்சு கூறியது.

----- 

Datuk Azhar Harun விட்டுச் சென்ற தேர்தல் ஆணையத் தலைவர் பதவிக்குத் தாம் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுவதை மனித உரிமை ஆர்வலர் Datuk Ambiga Sreenevasan  மறுத்திருக்கிறார்.

Datuk Azhar, மக்களவை சபாநாயகராகியிருப்பதை அடுத்து SPR தலைவர் பொறுப்பு காலியாகியுள்ளது. 

----- 

Kota Tinggi, Jalan Mawaiயில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து கவனமாக இருக்குமாறு ஜொகூர் வனவிலங்குத்துறை பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

அண்மையில் காட்டு யானைக் கூட்டம் தாக்கி பாதுகாவலர் ஒருவர் மரணமடைந்த வேளை, பழக்கடையொன்றும் சேதப்படுத்தப்பட்டதாக அது தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather