Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம்!

Jul 30, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக எட்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஐந்து உள்நாட்டில் பரவியதாகும்.

KL, ஜொகூர், சபாவில் அச்சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் ஐவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை; மொத்த மரண எண்ணிக்கை 124 ஆகும்.

சபாவில் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம்.

தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கோடி காட்டியுள்ளார்.

கல்வியமைச்சு அதன் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அறிவிப்பு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

“Saya percaya perkara ini sedang dipertimbangkan, insyallah Kementerian Pendidikan akan buat keputusan dalam waktu yang terdekat”

மற்றொரு நிலவரத்தில், பொது இடங்களில் குறிப்பாக மக்கள் திரளும் பகுதிகளில் சுவாசக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.

காவல் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டம் விதிக்கலாம் அல்லது எச்சரிக்கை வழங்கி அனுப்பலாம் என்றாரவர்.

வரும் சனிக்கிழமையில் இருந்து பொதுமக்கள் பொது இடங்களில் சுவாசக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாகும்.

சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு, திடீர் தேர்தலே என தாம் முன் வைத்தக் கோரிக்கையை ஏற்று மாநில ஆளுனர் சட்டமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக முதலமைச்சர் Datuk Seri Mohd Shafie Apdal தெரிவித்தார்.

சட்டமன்றம் கலைக்கப்பட்டிருப்பதை அடுத்து இன்றில் இருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதுவரை தாம் பராமரிப்பு அரசாங்கத்தின் முதலமைச்சராக நீடிக்கப் போவதாக Shafie சொன்னார்.

இதனிடையே தமக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறிக் கொண்டுள்ள முன்னாள் முதலமைச்சர் Tan Sri Musa Aman அதன் அடிப்படையில் ஆட்சியமைக்கத் தாம் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதை விடுத்து சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது தேவையற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், சபாவில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழவிருப்பதாகப் பரவியுள்ள தகவலை மாநில காவல் துறை மறுத்துள்ளது.

அச்செய்தி ஆதாரமற்றது என்றும் மாநிலத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாகவும் அது தெளிவுபடுத்தியது.

Perikatan Nasional கூட்டணியில் இணையப் போவதில்லை என UMNO அறிவித்துள்ளது.

மாறாக, ஏற்கனவே PAS கட்சியுடன் தாங்கள் அமைத்துள்ள Muafakat Nasional கூட்டணியிலேயே நீடித்து, அதனை வலுப்படுத்தப் போவதாக, அதன் தலைவர் சொன்னார்.

மத்தியிலும், மாநில அளவிலும் அரசுகளை அமைக்கும் அளவில் மட்டுமே Perikatan Nasional ஒத்துழைப்பு அமைந்திருக்கும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெளிவுப்படுத்தினார்.

இவ்வேளையில், BERSATU கட்சி, Muafakat Nasional கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அது பிறகு பேசி முடிவெடுக்கப்படும் என்றும் Zahid சொன்னார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather