Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிவகங்கை Cluster: விதிமுறையை மீறியதால் வந்த வினை!

Jul 29, 2020


நஜீப்: கடைசி வரைப் போராடுவேன்!

SRC International வழக்கில், KL உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து தாம் விரைவில் மேல்முறையீடு செய்யப்போவதாக Datuk Seri Najib Razak அறிவித்துள்ளார்.

"Saya amat kecewa dengan kehakiman dalam kes SRC mudah-mudahan di peringkat rayuan nanti kita dapat menghujahkan point point yang boleh diterima nanti. this is definitelynot the end of the world because there's a process of appeal and we hope that we would be successful then." - Datuk Seri Najib Razak

அந்த மேல்முறையீட்டில் தமது தரப்பு வெற்றிப் பெற வாய்ப்புகள் இருப்பதாக, நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Shafee Abdullah நம்பிக்கை தெரிவித்தார். 

"I'm happy because i've got a better chance because he found all 7 guilty, he denied every single, every single defence point has not been taken up by the judge so to me this is a better scenario to fight the judgement in the Appellate court. you got another 10 more judges to hear this case. this is just one judge because in the COA 3 judges, in the Federak court there are 7 judges" - Tan Sri Shafee Abdullah

இந்நிலையில், நேற்றையத் தீர்ப்பு, நீதித் துறைக்கு கிடைத்துள்ள வெற்றி அரசு தரப்பு வழக்கறிஞர் Datuk V. Sithambaram கூறியிருக்கின்றார்.

சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் வடிவில் தாங்கள் முன் வைத்த ஆதாரங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்து அவர் மனநிறைவு தெரிவித்தார். 

"We came with evidence, both in documentary form and with witnesses, presented the evidence and we are pleased that the evidence that we believed, we trusted, which we thought there was a case, was accepted by the court. Of course, it's a huge relief for us with the findings of the learned judge" Datuk V. Sithambaram

42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய அவ்வழக்கில், ஏழு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நஜீப்புக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

எனினும், நஜீப் தமக்கான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் இரு தேதிகளில் அவர் காவல் நிலையத்தில் தனது வருகையை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டது. 

மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடிவடையும் வரை Najib தனது Pekan நாடாளுமன்ற பொறுப்பில் நீடிப்பார் என மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 

புதிதாக சிவகங்கை Cluster!

நாட்டில் நேற்று, சரவாக் கூச்சிங்கில் பதிவான Cluster-ரை தவிர்த்து, மற்றொரு Cluster சம்பவம் இந்தியா, சிவகங்கையில் இருந்து திரும்பியவரை உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் நிரந்தர குடியுரிமைப் பெற்ற அவர், ஜூலை 13ஆம் தேதி இந்தியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பிய பிறகு, சுயமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தார்.

எனினும், அவ்விதிமுறையை மீறிய அவருக்கு, 2ஆவதுப் பரிசோதனையின் போது COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக கெடாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக Dr Noor Hisham சொன்னார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 28 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அவர்களில் ஐவருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதியாகியிருக்கின்றது.

இவ்வேளையில்,  நாட்டில் நேற்று மொத்தமாக 39 கொரோனா சம்பவங்கள் பதிவாகின; இன்னும் 212 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுகின்றனர்.
 

ஆந்திரா, கர்நாடகாவிலும் கொரோனா படுவேகம்!

இந்தியாவில் COVID-19 சம்பங்கள் படுவேகமாக பரவி வரும் நிலையில், மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளன.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான Maharashtra-வில், நேற்று ஏழாயிரத்து 700க்கும் அதிகமானோருக்கு அக்கிருமித்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில், கிட்டத்தட்ட ஏழாயிரம் பேருக்கு அத்தொற்று உறுதியானதை அடுத்து, இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது.

அவ்விரு மாநிலங்கள் தவிர்த்து, ஆந்திரா, கர்நாடாக ஆகியவற்றிலும் ஒரு நாளில் பதிவான கொரோனா எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளது.
 

அது தப்பான கருத்து - WHO விளக்கம்!

COVID-19 பரவலுக்கும், பருவ மாற்றத்திற்கும் தொடர்பில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகள், தற்போது வெவ்வேறான பருவங்களை கொண்டிருப்பதாக WHO கூறியது.

இந்த வைரசைப் பொறுத்த வரை, அதற்கு அனைத்துப் பருவங்களும் ஒன்று தான்; ஆனால் நெரிசலான இடங்களில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை தான் அதற்கு அதிகம் இருப்பதாக WHO தெரிவித்தது.
 
கோடைக் காலத்தில் இக்கிருமித் தொற்றுப் பரவல் அதிகம் இருக்காது; ;எனவே அந்தப் பருவம் தான் மிகப் பாதுகாப்பானது எனக் கூறி நிலவும் கருத்து தொடர்பில் WHO விளக்கமளித்தது.

 

Comeback செய்தார் பவித்ரா!

YouTube பிரபலம் பவித்ரா, புதிய சமையல் காணொளியுடன் சமூக வலைத்தளத்திற்கு திரும்பியுள்ளார்.

அக்காணொளி பதிவேற்றப்பட்ட 3 மணி நேரங்களில், ஏறக்குறைய ஒரு லட்சம் பார்வைகளை எட்டியிருக்கின்றது.

குடும்ப சர்ச்சைக் காரணமாக, இதற்கு முன், பவித்ராவின் கணவர், பழைய காணொளிகளை YouTube-பில் இருந்து அகற்றியதாக கூறப்பட்டது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather