Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுதந்திரம் கட்டுப்படுத்தப்படாது!

Jul 24, 2020


1981-ஆம் ஆண்டு FINAS சட்டத்தைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் தனிநபர் சுதந்திரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது!

அப்படியொரு நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாது என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் Datuk Saifuddin Abdullah தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புகளை நடத்த FINAS-சின் அனுமதி வேண்டும் என்பது தொடர்பில் மக்களவையில் தான் நேற்று பேசிய விவகாரம் தொடர்பான செய்திகள், வேறு மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

நடப்பிலுள்ள சட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது; அக்காலகட்டத்தில் Youtube, Tiktok ஆகியவையெல்லாம் இல்லை; எனவே கால மாற்றத்திற்கு ஏற்றவாறு FINASசின் சட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். 

சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள் பதிவேற்றும் சிறு சிறு காணொளிகளுக்குக் கூட இனி பிரச்னையோ என்ற ரீதியில் மக்கள் மத்தியில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
--------

மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த சிறப்புச் செயற்குழுவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கின்றது!

மது அருந்துவது மக்களுக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது என்பதால், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு கூறியது.

குறிப்பாக, மரு அருந்தி விட்டு வாகனமோட்டி, அதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை அத்தகைய 771 சம்பங்கள் பதிவாகி, அவற்றில் 44 பேர் உயிரிழந்திருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

______

சரவாக்கில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வரலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள 19 Cluster சம்பவங்களில் எட்டு சரவாக்கில் பதிவாகியிருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

எனினும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொது மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் அமைச்சு கேட்டுக் கொண்டது.
______

சிலாங்கூர், Kajangகில் இல்லாத ஓர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை இருப்பதாகக்கூறி, அதற்கு  நன்கொடை கோரி ஐந்து லட்சம் ரிங்கிட் வரை மோசடி செய்ததாக நம்பப்படும் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் விசாரணைக்காக நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை, மற்றொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

______

தாம் Covid-19னிலிருந்து பூரண குணமடைந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவலை Bolywood சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார்.

தாமும் தனது மகன் அபிஷேக்கும் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அவர் தனது Twitterரில் உறுதிபடுத்தியுள்ளார்.

______

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அச்சட்டத்தின் கீழ் சுவாசக் கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும்.

_______


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather