Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளிக்கிழமை தொடங்கி BSH உதவித் தொகை!

Jul 21, 2020


கிள்ளான் மற்றும் Kuala Langat-டின் சில பகுதிகளில் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை ஏற்படலாம்!

Jalan Johan Setia - Jalan Langat இடையிலான பாதையில் நீர் குழாய் உடைந்துள்ளதே காரணம் என, Air Selangor நிறுவனம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் Bandar Bistari, Sijangkang, Kampung Medan, Taman Seri Medan, Tropicana Aman ஆகியவை அடங்கும்.

சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கொள்கல லாரிகள் வாயிலாக தண்ணீர் விநியோகிப்படும் என்றும் அந்நிறுவனம் அறிக்கை வழி கூறியது.
 

BSH உதவித் தொகை!

மூன்றாம் கட்ட வாழ்க்கைச் செலவின உதவித் தொகை, இவ்வார வெள்ளிக்கிழமை, அதாவது ஜூலை 24ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும்.

அந்த உதவித் தொகை மொத்தமாக 3 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.
 

சுகுபவித்ராவுக்கு சிறந்த முன்மாதிரி விருது!

நாட்டின் YouTube புகழ் சுகுபவித்ரா தம்பதி, 2020ஆம் ஆண்டுக்கான ஈப்போ மாநகர் மன்றத்தின் சிறந்த முன்மாதிரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தனது அசாத்திய சமையல் கலையாலும், சரளமான மலாய் உச்சரிப்பின் வாயிலாகவும், குறுகிய காலத்திலேயே பிரதமர் உட்பட ஒட்டுமொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்த பவித்ரா தவிர்த்து, பல்வேறு துறைச் சார்ந்த நூறு பேர் இவ்விருதுக்கு தேர்வாகியிருப்பதாக ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 

இரு பெண்கள் தேடப்படுகின்றனர்!

சிலாங்கூர் Shah Alam-மில் மாமன்னர், பிரதமர், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோரின் ராட்சத சுவரோவியத்தை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அவ்விருவரும் பெண்கள் என நம்பப்படுவதாக Shah Alam காவல் துறை கூறியது; அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து பெறப்பட்ட CCTV கேமராவில் அக்காட்சி பதிவாகியிருப்பதையும் அத்துறை சுட்டிக் காட்டியது.
 

முதியோர் காப்பகத்தில் கொரோனா!

Johor Kluang-கில், முதியோர் காப்பகம் ஒன்றை உட்படுத்திய COVID-19 புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு 39 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள வேளை, அவர்களில் 14 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

அக்காப்பகத்தில் அத்தொற்று ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்படுவதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் நேற்று மொத்தமாக 21 COVID-19 சம்பவங்கள் பதிவான  வேளை, இன்னும் 122 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டு நிலவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 985 பேருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றது.

Oxford பரிசோதனை வெற்றி!

Oxford பல்கலைக்கழகம் மேற்கொண்ட Coronavirus தடுப்பூசி மீதான முதல் கட்ட பரிசோதனை வெற்றிப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

ஆயிரத்திற்கும் அதிகமானோரை உட்படுத்திய அப்பரிசோதனையில், அத்தடுப்பூசி பாதுகாப்பானது என்பதோடு, நல்ல தடுப்பாற்றலையும் கொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather