← Back to list
12 பேர் நலம்பெற்று வீடு திரும்பினர்!
Jul 16, 2020
நாட்டில் இன்று மூன்று உதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மரணம் ஏதும் பதிவாகாத நிலையில் அதன் எண்ணிக்கை 122ஆகவே நீடிக்கின்றது.
______
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையைப் பின்பற்ற முடியாமல் போகின்றனர்!
இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களிடம் கனிணி, Tablet, விவேக கைப்பேசி போன்றவை இல்லாமல் இருப்பதே என கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
இன்னும் சிலருக்கு நல்ல இணைய வசதி இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என அமைச்சு மேலும் சொன்னது.
______
பள்ளிகளில் handsanitizer திரவத்தைத் தயார் செய்து வைக்கும் செலவீனம் ஆசிரியர்களின் பொறுப்பில் இல்லை;
கல்வி அமைச்சு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கியிருப்பதாக தற்காப்பு அமைச்சர் மேலும் சொன்னார்.
______
சிலாங்கூர் மற்றும் தலைநகரில் தடைப்பட்டிருந்த தண்ணீர் விநியோகம் 77 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்னும் 67 இடங்களில் மட்டும் நிலைமை சீரடையவில்லை என Air Selangor தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை வழக்கத்திற்குத் திரும்பும் வரை அப்பகுதிகளுக்கு கொள்கலன் லாரிகளில் நீர் அனுப்பபடும் என்றும் அது கூறியது.
_______
தற்போது வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 229ஆகல் குறைந்துள்ளது.
ஜொகூரில் 201வரும் மலாக்காவில் 28 பேரும் தற்காலிக துயர் துடைப்பு மைய்யங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
_______
சீனாவில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வரும் நிலையில் அந்நாட்டில் வருகின்ற 20ஆம் தேதி தொடங்கி திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
எனினும் ஒரு திரையரங்கில் 30 விழுக்காட்டு இருக்கைகளே அதிகபட்சமாக விட்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
_______
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather