Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு RM600 சிறப்பு உதவி!

Jul 11, 2020


நாடு முழுவதும் உள்ள தகுதிப் பெற்ற 35 ஆயிரம் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் தலா 600 ரிங்கிட் சிறப்பு உதவியை அறிவித்துள்ளது.

அதற்காக 21 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

பதிவுப் பெற்ற பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.

அந்த உதவி எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

நிதி நிர்வகிப்பை திட்டமிடுங்கள்!

வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் இப்போதே தங்களது அடுத்தக் கட்ட நிதி நிர்வகிப்பை திட்டமிட வேண்டும்!

நிதி ஆலோசக மற்றும் கடன் நிர்வகிப்பு நிறுவனம் AKPK அந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் இருந்து பழையைப் படி கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை பொது மக்கள் இப்போதே திட்டமிட தொடங்க வேண்டும் என AKPK நடவடிக்கைப் பிரிவு அதிகாரி Nor Fazleen Zakaria தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்கு பிறகும், கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச்னை இருக்குமானால், அவர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களை அணுகி, கடனை திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

COVID-19 பெருந்தொற்று, அதனை தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவை காரணமாக மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இச்சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா சம்பவங்கள்!

அமெரிக்காவில், நேற்று ஒரு நாளில் புதிதாக 63 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, Johns Hopkins பல்கலைக்கழக தரவுத் தகவல்கள் காட்டுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 774 மரணங்களும் நிகழ்ந்திருப்பதாக அத்தகவல் கூறுகின்றது.

இதனிடையே, Brazil-லில் அன்றாடம் பதிவாகும் கொரோனா மரண எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், அக்கிருமித் தொற்றுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்க்கை 70 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் Brazil-லில் 45 ஆயிரம் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உலகில் கொரோனா கிருமித் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் இரு நாடுகளாக அமெரிக்காவும், Brazil-லும் திகழ்கின்றன.

UK-வில், COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், சுவாசக் கவசம் அணிவது மீதான வழிகாட்டி முறைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என அந்நாடு அறிவித்துள்ளது.

Hong Kong-கில் கொரோனா கிருமித் தொற்றுக்கான உள்நாட்டு சம்பவங்கள் திடீரென அதிகரித்தை அடுத்து, அங்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுகின்றன.

தமிழகம், சென்னையில், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் 68 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக, புள்ளி விவரம் காட்டுகின்றது.

ஆகக் கடைசி நிலவரப்படி, சென்னையில் மட்டும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 73 ஆயிரத்து 700க்கும் மேல் என கூறப்படுகிறது.

Kazakhstan சுகாதார அமைச்சு மறுப்பு!

Kazakhstan-னில் புதிய வகை நுரையீரல் அழற்சி pneumonia தொற்றுப் பரவி வருவதாக வெளியிடப்பட்டு வரும் தகவல்களை அந்நாடு மறுத்துள்ளது.

அத்தகவலில் உண்மையில்லை என Kazakhstan சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்ததை அடுத்து அண்மையில் தான் Kazakhstan மீண்டும் ஊரடங்கு உத்தரவை விதித்தது.

ஜூலை 10 ஆம் தேதி வரை 55 ஆயிரம் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும், 264 மரணங்களும் பதிவாகியிருப்பதாகவும் Kazakhstan கூறியிருக்கின்றது.

Kazakhstan-னில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக கூறி இதற்கு சீனா அந்நாட்டிலுள்ள தனது பிரஜைகளை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather