Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முதலாவது & மிகப் பெரிய CLUSTER முடிவுக்கு வந்தது!

Jul 09, 2020


நாட்டின் முதலாவது மற்றும் மிகப் பெரிய COVID-19 Cluster சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது!

நான்கு மாதங்களுக்கு முன் முதல் சம்பவத்தைப் பதிவுச் செய்திருந்த KL Sri Petaling பள்ளிவாசல் COVID-19 cluster-ரின் கீழ் தற்போது  எந்த சம்பவங்களும் இல்லை என்பதை சுகாதார துறை தலைமை இயக்குநர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இது உள்நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

"Kejayaan ini merupakan kejayaan bersama bagi KKM dan agensi lain yang telah bekerjasama melalui tindakan bersepadu dalam segala pendekatan bagi mengawal dan membendung penularan Covid-19 dalam kluster ini"

இந்த cluster-ரின் கீழ் பரிசோதிக்கப்பட்டவர்களில் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த வேளை, 34 மரணங்கள் பதிவாகியிருந்தன.

மற்றொரு நிலவரத்தில், நாட்டில் பதிவாகும் COVID-19 சம்பங்களில் ஏறக்குறைய 70 விழுக்காடு, asymptomatic அதாவது அறிகுறிகள் அற்ற நோயாளிகளை உட்படுத்தியிருப்பதாகவும் Dr Noor Hisham தெரிவித்தார்.

நாட்டில் நேற்று புதிதாக 3 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஐவர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.

இதையடுத்து அத்தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 486 அல்லது 97 புள்ளி 8 விழுக்காடு என Dr Noor Hisham சொன்னார்.

இன்னும் ஏறக்குறைய 70 பேர் மட்டுமே அக்கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

இந்தோனிசிய தூதரகம் பாராட்டு!

இதனிடையே, COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த மலேசியா எடுத்து வரும் ஆக்ககர நடவடிக்கைகள் அனைவருக்கும் நல்ல உதாரணமாக அமைய வேண்டும் என மலேசியாவுக்கான இந்தோனிசிய தூதரகம் கூறியிருக்கின்றது.

மார்ச் 18 ஆம் தேதி அமுலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கி தற்போதைய மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டம் முழுவதும் கொரோனாப் பரவலை கையாள  மலேசியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் சிறந்த பலனளித்திருப்பதை காண முடிவதாக அத்தூதரகம் தெரிவித்தது.
 

உயர்கல்விக் கழகங்கள் திறப்பு!

இம்மாதம் தொடங்கி உள்நாட்டு உயர்க்கல்விக்கழக மாணவர்கள் கட்டங் கட்டமாக தத்தம் உயர்க்கல்விக் கழகங்களுக்குத் திரும்ப அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அக்டோபர் மாத வாக்கில் அனைத்து மாணவர்களும் தத்தம் உயர்க்கல்விக் கழகங்களில் மேல் கல்வியைத் தொடர இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்விக் கல்வி அமைச்சு  அறிவித்தது.

3 மில்லியனை தாண்டியது!


அமெரிக்காவில், COVID-19 கிருமித் தொற்று சம்பவங்கள் மூன்று மில்லியனை தாண்டியிருப்பதாக Johns Hopkins பல்கலைக்கழகம் கூறியிருக்கின்றது.

நேற்று ஒரு நாளில் அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக  60 ஆயிரம் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather