← Back to list
இன்று ஜூலை 1!
Jul 01, 2020
3 மாதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக திரையரங்குகள் கடுமையான SPO-களுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
அரசாங்கம் வழங்கியுள்ள அந்த அனுமதியை துறை சார் கலைஞர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.!
அவர்களில் ஒருவர் தான் இளம் வயதிலேயே பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்துள்ள திரைப்படஇயக்குனர் Shalini Balasundram.
திரைப்படங்கள்என்பது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படகுழுவினர் ஆகியோரையும் தாண்டி, பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்று என்றாரவர்.
எல்லா வர்கத்தினருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொழுது போக்கு திரைப்படங்கள் தான் என்பதால், இதில் பொது மக்களும் நன்மையடைவர் என்பதே அவரது கருத்து.
கொரோனா வைரஸ் தொற்றின் சீற்றம் இன்னும் தணியாத நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறப்பதென்பது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காதா என்று வினவப்பட்டபோது,
''Covid-19 பெருந்தொற்றை சிறந்த முறையில் கைய்யாண்ட உலகநாடுகளில் ஒன்றான மலேசியா, போதிய ஆய்வுகளுக்குப் பிறகே இந்த முடிவைஎடுத்திருக்கும் என தாம் நம்புவதாக ஷாலினி சொன்னார்''
அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின் பற்றினால், நிச்சயம் அனைவரின் பாதுகாப்பும் உறுதிச் செய்யப்படும் என்றாரவர்.
ஆனால்,Covid19குறித்து பொதுமக்களுக்கு அவர் முக்கியமாகக் கூறவிரும்பும் ஆலோசனை என்னவென்று கேட்ட போது, ‘’Covid-19 சம்பவங்கள் குறைந்து கொண்டே வந்தாலும், இந்த பெருந்தொற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்ற மெத்தனம் வேண்டாம்!’’
‘’ஆரம்பகாலங்களில் எவ்வாறு கூடல் இடைவெளியைப் பின்பற்றுதல், Sanitizer திரவத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பின் பற்றினோமோ அதே பழக்க வழக்கங்களை புதிய வழமையின் கீழ் பொதுமக்கள் பின் பற்ற வேண்டும்’’ என ஷாலினி தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர்சொன்னார்.
அதிகபட்சம் 250 பேரை ஒரு திரையரங்கில் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு, நாட்டிலுள்ள திரையரங்குகள் இன்று தொடங்கி மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
எனவே எந்த ஒரு வாய்ப்பையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளாமல், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்போம், பாதுகாப்பாக இருப்போம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather