Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தடுப்பூசியைப் பரிசோதிக்கும் இந்தியா!

Jul 01, 2020


WHO-வின் கருத்தை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டது!

உலகளவில் COVID-19 பெருந்தொற்றின் சீற்றம் இன்னும் தணியவில்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை சுகாதார அமைச்சு ஆமோதித்துள்ளது.

எனவே, மலேசியாவில் COVID-19 சம்பவங்கள் குறைந்து வருவதை எண்ணி திருப்திப்பட்டுக் கொண்டு, மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டில் நேற்று இரண்டு கொரோனா சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை, 20 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இன்னும் 164 பேர் மட்டுமே அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களாக அக்கிருமித் தொற்றினால் நாட்டில் மரணங்கள் பதிவாகவில்லை.

இந்நிலையில், அரசாங்கம் விதித்துள்ள SOP-களை பின்பற்றி, எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுமாறு  பொது மக்களை வலியுறுத்தப்படுகின்றனர்.

இதனிடையே, ஏறக்குறைய 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த சமூக மற்றும் பொருளாதார துறைகளில் சில, இன்று மீண்டும் செயல்படவுள்ளன.

திரையரங்கம், தனியார் மற்றும் பொது நீச்சல் குளம் மற்றும் SPA சேவை நிலையங்கள் அதிலடங்கும்.

திருமணம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இன்று தொடங்கி நடத்தவும் அனுமதி உண்டு; எனினும், விருந்தினர் பட்டியல் 250 பேருக்கும் மேல் போகக்கூடாது. 
 

BSH - உதவி நிதி ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும்!

தீபகற்பம், சபா மற்றும் சரவாக்கில் உட்புறப் பகுதிகளைச் சாராதவர்களுக்கான  மூன்றாம் கட்ட வாழ்க்கைச் செலவின உதவி நிதி BSH, ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

600 ரிங்கிட் நிதிப் பெறும் குடும்பங்களுக்கு, கூடுதலாக ஒவ்வொருப் பிள்ளைக்கும் தலா 120 ரிங்கிட் நிதி வழங்கப்படும்.

எனினும், அந்த தொகை 18 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் மற்றும் கூடியப்பட்சம் 4 பிள்ளைகளை மட்டுமே உட்படுத்தியிருக்கும் என அமைச்சு தெரிவித்தது.
 

Covaxin: இந்தியா பரிசோதிக்கவுள்ளது!

இந்தியாவில் COVID-19 பரவல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இம்மாதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை இந்தியா பரிசோதிக்கவிருக்கின்றது.

ஏற்கனவே, பிராணிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நல்ல பலனைக் காட்டுவதால், அடுத்த அத்தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக BBC தகவல் கூறுகின்றது.

இதனிடையே, தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து 943 பேருக்கு கொரோனோ கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 167-ஆக அதிகரித்தது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather