← Back to list
3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை!
Jun 27, 2020
COVID-19 கோறனி நச்சில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் அக்கிருமித் தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதம் இல்லை!
சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது.
Antibody-யின் அளவு மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அப்பரிசோதனை உதவும் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
COVID-19 முன்னாள் நோயாளிகளுக்கு எளிதில் கிருமித் தொற்றுகள் ஏற்படும் என அணமையில் உள்ளூநர் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டிருந்த தகவலை மேற்கோள் காட்டி, Dr Noor Hisham பேசினார்.
அத்தகவல் வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலானது; அப்படி எந்த சம்பவங்களும் மலேசியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றாரவர்.
நாட்டில் நேற்று 6 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, 23 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
மற்றொரு நிலவரத்தில் Ampang-கில், உள்நாட்டினர் ஒருவரையும் சேர்த்து 14 பேருக்கு ஏற்பட்டுள்ள மலேரியா காய்ச்சலுக்கு, அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் காரணம் என சுகாதார அமைச்சு சந்தேகிக்கிறது.
அந்த இந்தோனிசிய கட்டுமானத் தொழிலாளிக்கு, அவரது சொந்த ஊரான Aceh-விலேயே அந்நோய் பீடித்ததாகவும் நம்பப்படுவதாக Dr Noor Hisham தெரிவித்தார்.
ஆகக் கடைசி சம்பவம் ஜூன் 12ஆம் தேதி பதிவானது; எனினும், Ampang-கில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக Dr Noor Hisham சொன்னார்.
இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்!
உலகமே COVID-19 சீற்றம் மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் போராடி வரும் நிலையில், இருக்கின்ற வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!
அதை விடுத்து, குறிப்பிட்ட வேலையை தான் செய்ய முடியும் எனக் கூறி அதிகம் தேர்தெடுக்க வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அப்பிரச்னையை கையாள, குறிப்பாக வேலை இழந்தோருக்கு மீண்டும் வேலைக் கிடைப்பதை உறுதிச் செய்ய, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த தரப்பினருடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் என மனித வள அமைச்சு கூறியது.
மலேசியா - சிங்கப்பூர் பேச்சு வார்த்தை!
சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள், அன்றாடம் அங்கு சென்று வர அனுமதிப்பது பற்றி பரிசீலிக்குமாறு, மலேசியா, சிங்கப்பூரை கேட்டுக் கொண்டிருக்கிறது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, நேற்று சிங்கப்பூர் பிரதமரை தொலைப்பேசியில் அழைத்து எல்லைத் திறப்பு குறித்து கலந்தாலோசித்தார்.
குறிப்பிட்ட வழிக்காட்டி முறைகளின் கீழ், மிக கவனமாக எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகவும் Tan Sri Muyhiddin கூறினார்.
வயது வரம்பு நிலைநிறுத்தம்!
ஊழியர் சேமநிதி வாரியம் EPF சந்தாதாரர்கள், தங்களது ஒன்றாவது மற்றும் 2ஆவது கணக்கில் இருந்து முழுத் தொகையையும் மீட்பதற்கான வயது வரம்பு 55 என நிலைநிறுத்தப்படுகிறது.
அவ்வயது வரம்பை 65க்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என அவ்வாரியம் தெரிவித்தது.
அவ்வயது வரம்பை 55தில் இருந்து படிப்படியாக 65க்கு உயர்த்துமாறு, உலக வங்கி இதற்கு முன் பரிந்துரைத்திருந்தது.
தீர்மானம் தாக்கல்!
ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில், நாட்டின் 8ஆவது பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னின் தலைமைத்துவத்திற்கு ஆதரவாக, PAS கட்சி, நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யவிருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather