Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பாலர் பள்ளிகளை திறக்கும் முடிவில் மாற்றம் இல்லை!

Jun 24, 2020


அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தது போல, பாலர் பள்ளிகள் ஜூலை ஒன்றாம் தேதி திறக்கப்படும்.

அதில் மாற்றமில்லை என கல்வி துணை அமைச்சர் கூறியுள்ளார்.

நிறையப் பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல தொடங்கி விட்டதால், அவர்கள் பிள்ளைகளை பாலர் பள்ளிக்கு அனுப்ப  வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளை திறப்பதை ஒத்தி வைக்குமாறு, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP முன்னதாக கோரிக்கை வைத்தது.

பாலர் பள்ளிகளை திறக்க அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP- களை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக பின்பற்றுவது கடினம் என்பதை NUTP சுட்டிக் காட்டியிருந்தது.

பள்ளி அட்டவணையில் மாற்றம்!

நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்களை முழுமையாக முடிக்க, ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கில், கல்வி அமைச்சு இவ்வாண்டுக்கான பள்ளி அட்டவணையில் மாற்றங்கள் செய்துள்ளது.

இரண்டாம் தவணைக்கான, பள்ளி விடுமுறையை 9 நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைப்பதும் அம்மாற்றங்களில் ஒன்று என அமைச்சு தெரிவித்தது.

ஆண்டு இறுதிக்கான பள்ளி விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

COVID-19 பரவலை அடுத்து கடந்த 3 மாதங்களாக ஏற்பட்ட எதிர்பாரா சூழ்நிலையை அடுத்து அமைச்சு அந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, முதல் கட்டமாக இன்று ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

ஏறக்குறைய 5 லட்சம் மாணவர்கள் இன்று தத்தம் வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.

எண்ணிக்கை குறைந்தது!

நேற்று நாட்டில் மூவருக்கு மட்டுமே கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தபட்டதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் மலேசியர்; ஏனைய இருவர் அந்நிய நாட்டவர்கள்.

நேற்று 9 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய வேளை, மரணம் பதிவாகவில்லை.

இன்னும் ஏறக்குறைய 283 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக Dr Noor Hisham சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP -யை பின்பற்றாத 16 கட்டுமானத் தளங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏறக்குறைய 105 கட்டுமானத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather