← Back to list
சமூக நிகழ்வுகளுக்கு அனுமதி!
Jun 24, 2020
நாட்டில் மேலும் 45 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இன்னும் 244 பேர் மட்டுமே அக்கிருமித் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஓர் இலக்க எண்ணாக 6 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மரணம் ஏதும் பதிவாகாததால் மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.
ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து திருமண வைபவங்கள், விருந்துபசரிப்புகள், மற்றும் சமயம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்காப்பு அமைச்சர் Dato Seri Ismail Sabri Yaakob அதனைத் தெரிவித்தார்.
"Majlis sosial yang dibenarkan merangkumi majlis perkahwinan dan pertunangan, majlis berkaitan agama seperti tahlil, akikah, doa selamat dan juga majlis hari jadi, reunion dan sebagainya"
எனினும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOP கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றாரவர்.
“Majlis sosial ini dibenarkan penganjurannya selama tiga hingga lima jam, kapasiti kehadiran masih lagi kita kekalkan iaitu tidak melebihi 250 orang pada satu-satu masa"
அதோடு நிகழ்வுகளில் கலந்து கொள்வோரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“Kaunter saringan perlu ada. Tetamu perlu diambil suhu badan. Kita tidak benarkan mereka yang bergejala untuk hadir seperti orang demam, selsema. Mereka tak dibenarkan hadir. Penganjur dan tetamu digalakkan memakai penutup muka. Penganjur juga mesti daftar tetamu dengan apps mysejahtera atau direkodkan secara manual”
தனியார் tuition மையங்களையும் பள்ளிகளில் உள்ள surau தொழுகையிடங்களையும் மீண்டும் திறக்க விரைவில் அனுமதிக்கப்படலாம்.
அது குறித்து வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படவிருக்கிறது.
நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வியமைச்சு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அது இன்னமும் திட்டமிடல் நிலையிலேதான் இருப்பதாகவும், நாட்டில் Covid-19 நிலவரத்தைப் பொருத்தே ஆரம்பப் பள்ளிகளைத் திறக்கும் முடிவு அமைந்திருக்கும் எனவும் அமைச்சு தெரிவித்தது.
இன்று நாடு முழுவதும் முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் ஐந்து மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்காக இடைநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதனிடையே, இவ்வாண்டுக்கான பள்ளி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு விடுமுறைகள் குறைக்கப்பட்டிருப்பது குறித்து பல தரப்புகள் வெளியிட்டுள்ள அதிருப்தி தொடர்பில் விவாதிக்கப்படும் என அமைச்சு கூறியது.
மற்றொரு நிலவரத்தில், Covid-19 கிருமித் தொற்று பரவல் காணப்படும் பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவிடலாம் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திரங்கானு, Wakaf Tembesuவில் டுரியான் பழ வியாபாரி ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பதாகக் கூறப்படுவதை மாநில சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
அத்தகவல் உண்மையில்லை என அது தெளிவுபடுத்தியது.
உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.myயில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
பிற செய்திகள்.....
கூட்டரசு நெடுஞ்சாலையில், Petaling Jayaவில் அண்மையில் மோட்டார் சைக்கிள்கள் செல்லும் பாதையில் காரை ஓட்டிச் சென்ற நபரைக் காவல் துறை தேடி வருகின்றது.
அக்காட்சிகள் உள்ள காணொளி முன்னதாகச் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-----
போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தற்காப்புத்துறை முன்னாள் அமைச்சர் Mohamad Sabuவின் மகன் Ahmad Saiful Islam Mohamadட்டுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-----
மலாக்காவில் அண்மையில் பிறந்த குழந்தை கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather