← Back to list
பாலர் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்!
Jun 23, 2020
கொரோனா பரவலை அடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை ஐந்தாம் மற்றும் 6ஆம் படிவ மாணவர்கள் பள்ளிக்கு திரும்பவுள்ளனர்.
இந்நிலையில், அனைத்து பள்ளிகலும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP கூறியது.
கூடல் இடைவெளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என NUTP தலைவர் Aminuddin Awang தெரிவித்தார்.
நாளை மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியதும், புதிய வழமைகளுக்கு மத்தியில் தங்களது கல்வி கற்கும் சூழ்நிலையை உடனக்குடன் பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் தமக்கிருப்பதாக அவர் சொன்னார்.
பள்ளிக்கு திரும்ப கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் Aminuddin எதிர்பார்க்கின்றார்.
இவ்வேளையில், ஜூலை ஒன்றாம் தேதி, மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளை திறக்கும் முடிவை ஒத்தி வைக்குமாறு, NUTP அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP-களை முழுமையாக பின்பற்ற, சில பள்ளிகள் சிரமத்தை எதிர்நோக்கலாம் என்பதை NUTP சுட்டிக் காட்டியது.
ஒரு சிலப் பள்ளிகளில் இரு வகுப்பறைகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் மத்தியில் கூடல் இடைவெளியை அமுல்படுத்துவது கடினமாகலாம் என NUTP கருதுகின்றது.
அந்நிய தொழிலாளர்களுக்கு தடை!
ஆண்டு இறுதி வரை, அனைத்துத் தொழில் துறைகளிலும் புதிதாக அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
உள்நாட்டினருக்கே இனி முன்னுரிமை வழங்கப்படும் என மனிதவளத் துறை அமைச்சர் Datuk Seri M. Saravanan அறிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் சுற்றுப் பயணிகளாக வந்து போவதில் பிரச்னை இல்லை என்றார் அவர்.
வேலைச் சந்தையில் வெளிநாட்டினரையே நம்பியிருக்கும் நிலையை அரசு மாற்ற விரும்புவதாக அவர் சொன்னார்.
நோயாளிகளை காண முடியாது!
மருத்துவமனைகளில் நோயாளிகளை நேரில் சென்று காண பொது மக்களுக்கு இன்னும் அனுமதியில்லை.
பொதுவாகவே, மருத்துவமனைகளில் நோய்த் தொற்று அதிகம் இருக்கும் என்பதே அதற்கு காரணம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
எனினும், மிக மோசமான உடல்நிலையில் உள்ளவர்களை காணச் செல்வோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
என்றாலும், பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாது.
மற்ற மாவட்டங்களிலும் கொரோனா!
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ஈராயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை சென்னையில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தவிர்த்து, மதுரை, திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather