Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தந்தையைக் கொண்டாடும் நன்னாள்!

Jun 21, 2020


இன்று தந்தையர் தினம்.

நம்மில் பலருக்கு தந்தை ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு கதாநாயகனாக, முன்னோடியாக, தோழனாக இருப்பதை மறுக்க இயலாது.

அவ்வகையில், சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr. Noor Hisham Abdullahவின் புதல்வர் Muhammad Khair Noor Hisham தமது தந்தை குறித்து இவ்வாறு பெருமிதமாகக் கூறுகிறார்.

"WE CAN’T HELP BUT FEELING PROUD THAT THE PERSON THEY ARE TALKING ABOUT IS OUR AYAH. THE RESULT OF YOUR HARD WORK AND ALL THE VALUES THAT YOU HAVE TAUGHT US REPRESENTS WHO YOU ARE. YOU HAVE TAUGHT US TO PUT OTHERS FIRST, TO WORK HARD IN EVERYTHING WE DO, TO BE PATIENT AND TO HAVE FAITH. WE ARE VERY PROUD TO HAVE YOU AS OUR AYAH AND WE ARE FOREVER THANKFUL FOR ALL THE VALUABLE LESSONS FROM YOU AS OUR DAD, OUR IMAM AND OUR HERO. HAPPY FATHER’S DAY AYAH!"

அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

சிலாங்கூர், Sepangங்கில் Labu Lanjutட்டில் Covid-19 தொடர்பில் புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு ஐவருக்கு அக்கிருமித் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 29 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

நாட்டில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் Covid-19னில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துள்ளனர்.

அதனை அடுத்து இதுவரை நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் Covid-19 கிருமித் தொற்று சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

புதிதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து இதற்கு முன் பச்சை மண்டலத்தில் இருந்த Hulu Selangor மீண்டும் மஞ்சள் மண்டலத்தில் இணைந்துள்ளது.

Sepang, Gombak, கிள்ளான், Petaling உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் இன்னமும் மஞ்சள் மண்டலப் பட்டியலில் இருக்கின்றன. 

சீனா, Beijingங்கிலும் அந்நாட்டின் பிற பகுதிகளிலும் மலேசியர்கள் எவருக்கும் Covid-19 பீடிக்கவில்லை.

Beijingங்கில் coronavirus மீண்டும் பரவியிருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து வெளியுறவு அமைச்சு அவ்வாறு தெரிவித்துள்ளது. 

பேரா, Taipingங்கில் பேராங்காடியொன்றை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பில் உள்ள மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றாததே அதற்குக் காரணம்.

கோழியின் விலை தொடர்ந்து அதிகரித்தால், உச்ச வரம்பு விலை நிர்ணயிக்கப்படும் என அரசாஙம் எச்சரித்துள்ளது.

அண்மைய காலமாக நாட்டில் சில பகுதிகளில் கோழியில் விலை அதிகரிப்பதே அதற்குக் காரணம்.

ஜொகூரில் ஐந்து மாவட்டங்களில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Pontian, Batu Pahat, Kluang, Muar, Tangkak ஆகியவை அம்மாவட்டங்களாகும்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather