← Back to list
COVID-19: ஆறு புதிய சம்பவங்கள்!
Jun 19, 2020
சரவாக் Kidurong-கில் இன்று COVID-19 புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அச்சம்பவம், உயர்கல்விக் கழக மாணவரை உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
அங்கு இதுவரை ஆறு பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"KKM ingin memaklumkan iaitu kluster kindurong, sehingga kini 6 kes didapati positif, kes indeks merupakan pelajar ipt awam dan dikesan positif 12 jun lalu"
அம்மாணவருக்கு எவ்வாறு அக்கிருமித் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்படுவதாகவும் Dr Noor Hisham சொன்னார்.
இவ்வேளையில், நாட்டில் இன்று ஆறு புதிய COVID-19 கோறனி நச்சில் தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
அதில் 4 சம்பவங்கள் உள்நாட்டினரை உட்படுத்தியது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று 70 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; மரணம் ஏற்படவில்லை.
மேலும் தளர்வுகள்!
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO-வுக்கான இக்காலக்கட்டத்தில், தளர்வுகள் அதிகரிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு மாணவர்கள் மலேசியாவுக்கு திரும்பி தங்களது மேற்கல்வியை தொடர்வதற்கான தளர்வும் அதில் ஒன்று என, தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், அம்மாணவர்கள் முதலில் தங்களை உயர்கல்வி அமைச்சிடம் பதிந்துக் கொள்ள வேண்டும் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அதே சமயம், அவர்கள் மலேசியாவுக்கு திரும்பும் முன் அல்லது இங்கு வந்து சேர்ந்ததும் COVID-19 கிருமித் தொற்றுக்கானப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.
இதனிடையே, வெளிநாடுகளில் பயிலும் மலேசியர்கள், இப்போது தங்களது பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப கல்வியை தொடரவும், பரீட்சைக்கு அமரவும் அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்காக அவர்கள் குடிநுழைவுத் துறையிடம் விண்ணப்பிக்க தேவையில்லை;
ஆனால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து கடிதம் பெற வேண்டும் என Datuk Seri Ismail Sabri கூறினார்.
"Mereka perlu ada surat membuktikan mereka perlu ke luar negara untuk sambung pelajaran atau menduduki peperiksaan. Dengan surat tersebut mereka boleh ke luar negara tanpa mendapatkan kebenaran awal dari Jabatan Imigresen"
மற்றொரு நிலவரத்தில், பணி நிமித்தம் வெளிநாட்டு நிபுணர்கள் மலேசியாவுக்கு திரும்பலாம்.
அவர்களும் குடிநுழைவுத் துறையிடம் விண்ணப்பிக்க தேவையில்லை என Datuk Seri Ismail கூறினார்.
இதனிடையே, பொது நீச்சல் குளங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நீச்சல் குளங்களை மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது.
அதற்கான SOP-கள் விரைவில் இறுதிச் செய்யப்படும் என்றாரவர்.
"SOP tersebut perlu dibangunkan dulu dan insyaAllah selepas dibentangkan SOP untuk kolam renang yang lain kita akan memberikan kelulusan. Kita tunggu dulu"
இவ்வேளையில், உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளில் பெரிய மேசையாக இருந்தால், ஒரே மேசையில் நான்கு பேருக்கும் மேல் அமரலாம் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.
"Kalau meja tu 10 orang satu meja panjang, boleh ada penjarakkan sosial, so boleh 10 orang satu meja dengan syarat ada penjarakkan sosial"
கூடல் இடைவெளி தொடர்ந்து பின்பற்றப் படும் பட்சத்தில் அவ்வாறு அமரலாம் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail தெரிவித்தார்.
எரிபொருள் விலை!
RON 95 மற்றும் RON 97 ரக பெட் ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு தலா 3 சென் அதிகரித்து, முறையே ஒரு ரிங்கிட் 59 சென் மற்றும் ஒரு ரிங்கிட் 89 சென் விலையில் விற்கப்படும்.
டீசலுக்கான சில்லறை விலை லிட்டருக்கு 4 சென் உயர்ந்து, 1 ரிங்கிட் 77 சென்னாகப் பதிவாகியுள்ளது; நள்ளிரவு தொடங்கி இந்த விலை அமுலுக்கு வரும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather