Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

எண்ணாயிரம் பேர் குணமடைந்துள்ளனர்!

Jun 18, 2020


நாட்டில் Covid-19 கிருமித் தொற்றில் இருந்து மேலும் 127 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

அதனை அடுத்து இதுவரை நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரித்துள்ளது. 

புதிதாக 14 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவற்றில் 4 உள்நாட்டவர்களை உட்படுத்தியதாகும். 

புதிய மரணம் பதிவாகவில்லை. 

அவ்வெண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.

குடிநுழைவு தடுப்பு முகாம்களில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் மற்றும் பணியாளர்கள் Covid-19 தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

அவர்களில் சுமார் 790 பேருக்கு அத்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 Covid-19 பரவலைத் தடுக்க Selayang மொத்த வியாபாரச் சந்தையின் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. 

அக்கடைகள் உரிய ஆவணங்கள் இல்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தவை என கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்தது. 

அப்பகுதியில் அந்நிய நாட்டவர்கள் வேலை செய்யக்கூடாது என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.

 

சிலாங்கூரில் மீண்டும் திறக்க ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட  பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அவ்வகையில் 40தில் இருந்து 150 பேர் என அவ்வெண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. 

Covid-19 தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் மேலும் அதிகமான பள்ளிவாசல்களைத் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.  

சபாவில் பச்சை மற்றும் மஞ்சள் மண்டலப் பகுதிகளில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களை சுகாதார வழிகாட்டியைப் பின்பற்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் 12 வயதுக்குக் கீழ்பட்டோரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் செல்ல அனுமதியில்லை.

சரவாக்கில் சனிக்கிழமை தொடங்கி முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களின் அளவைப் பொருத்து 250 பேர் வரை வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

நடப்பில் உள்ள மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் கெடாவில் Langkawi உட்பட சுற்றுலாத் துறை சுமார் 90 விழுக்காடு மீண்டும் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பஹாங், Chini சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி Sharim Md Zainனை தனது வேட்பாளராக நிறுத்துகிறது.

அவ்விடைத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather