← Back to list
TNB கட்டணம்: பயனீட்டாளர் கோரிக்கைகளுக்கான நடுவர் மன்றத்திடம் புகாரளிக்கலாம்!
Jun 17, 2020
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில், தங்களது மின்சார கட்டணம் கணிசமாக உயர்வு கண்டிருப்பதாக கூறி பொது மக்களில் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு அதிருப்தி அடைந்தவர்கள், 5 ரிங்கிட் கட்டணத்தில், பயனீட்டாளர் கோரிக்கைகளுக்கான நடுவர் மன்றத்திடம் அதன் தொடர்பில் புகாரளிக்கலாம் என, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே, இப்பிரச்னை குறித்து, எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக TNB தெரிவித்தது.
COVID-19: குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
நாட்டில் நேற்று மிக அதிகமாக 333 பேர் COVID-19 கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
மார்ச் 18, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த பிறகு, ஒரே நாளில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருப்பது இதுவே முதன் முறை.
நேற்று 11 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, மரணம் எதுவும் நிகழவில்லை.
மற்றொரு நிலவரத்தில், டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள், வாரத்திற்கு சராசரியாக 8 விழுக்காடு அதிகரித்து வருகின்றது.
எனவே இந்த டெங்கிச் சம்பவங்களை கட்டுப்படுத்த, பொது மக்களில் ஒவ்வொருவரும், குறைந்தது 10 நிமிடங்களாவது வீட்டுச் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய செலவிட வேண்டும் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியிருக்கின்றார்.
இந்திய - சீன எல்லையில் ராணுவம் மோதல்!
காஷ்மீரின் Ladakh பகுதியில் அமைந்துள்ள Galwan பள்ளத்தாக்கில், இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில், குறைந்தது 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
Image: Firstpost
சீனா, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, ஒருதலைபட்சமாக நடந்துக் கொண்டதே அம்மோதலுக்கு காரணம் என இந்தியா குற்றம் சாட்டியிருக்கின்றது.
அத்தாக்குதலில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.
மாறாக இரு நாட்டு ராணுவமும், கற்களை பயன்படுத்தி கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
ஐநா வருத்தம்!
மற்றொரு நிலவரத்தில், ரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் இவ்வேளையில், இந்தியா சீனா இடையிலான மோதல் வேதனையளிப்பதாக, ஐ.நா பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் இருந்து இரு நாட்டுப் படைகளும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather