← Back to list
COVID-19: நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது!
Jun 15, 2020
மார்ச் 18 ஆம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த பிறகு, நாட்டில் முதன் முறையாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் COVID-19 நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
நேற்று அவ்வெண்ணிக்கை தொள்ளாயிரத்து 86 ஆகப் பதிவானதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
அதே சமயம், COVID-19 சம்பவங்கள் மீண்டும் ஓர் இலக்க எண்ணாக அதாவது 8ஆகப் பதிவாகியது.
நேற்று 35 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக, Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
இதையடுத்து, அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்து 346 பேராக அதாவது 86 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறிப்பாக மீன்கள் தொடர்பில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை சுகாதார அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உணவு வாயிலாக COVID-19 கிருமித் தொற்றுப் பரவியதாக இதுவரை எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்றும் Dr Noor Hisham சொன்னார்.
ஒருவேளை அக்கிருமி உணவுகளில் இருந்தால் கூட, அந்த உணவு முழுமையாக சமைப்படும் போது அக்கிருமி அழிந்து விடும் என்றாரவர்.
எனவே, பொது மக்கள் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை என Dr Noor Hisham கூறினார்.
வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதில்லை!
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO-வுக்கான இக்காலக்கட்டத்தில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
அப்படியே ஒருவேளை, மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், அதற்கு மிக முக்கியமான காரணம் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, வெளிநாடுகளில் பரீட்சைக்கு அமர வேண்டியிருந்தால், அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றாரவர்.
தக்க காரணத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளவர்கள், குடிநுழைவுத் துறை வாயிலாக அனுமதி கோர வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்படும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என Datuk Seri Ismail Sabri Yaakob எச்சரித்துள்ளார்.
இவ்வேளையில், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், போக்குவரத்து சீராக இருப்பதாக Ismail Sabri கூறினார்.
R&R பகுதிகளில் வியாபாரிகளும், பொது மக்களும், அரசாங்கம் விதித்துள்ள SOP-களை முறையாகப் பின்பற்றுவதை காண முடிவதாகவும் அவர் சொன்னார்.
இருந்த போதிலும், இந்த RMCO காலக்கட்டத்தில், அரசாங்கம் வழங்கியுள்ள தளர்வுகளை மக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், Ismail Sabri வலியுறுத்தினார்.
பொது இடங்களில், புதிய cluster சம்பவங்கள் உருவாகாமல் இருப்பதை உறுதிச் செய்ய, ஒவ்வொருவரும் சுய சுத்தத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், உலகில் COVID-19 பெருந்தொற்றை, வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த 5 நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய மக்களின் பக்குவத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இதுவென, தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மலேசியர்கள், கை மணிக்கட்டில் அணிய வேண்டிய wristband-டை அகற்றினால், ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
அத்தொற்றில் இருந்து அவர்கள் விடுப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, அவர்கள் அந்த wristband-டை அகற்ற முடியும் என Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
கடந்த சனிக்கிழமை மட்டும், ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மொத்தம் 575 மலேசியர்கள் நாடு திரும்பினர்.
அவர்களில் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதியான வேளை, மற்றவர்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா நிலவரம்.....
இந்தியாவில், கொரோனா சம்பவங்கள் மூன்று லட்சத்தை தாண்டியுள்ள வேளை மரண எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather