← Back to list
புதிதாக 41 சம்பவங்கள்!
Jun 15, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 41 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 32 சம்பவங்கள் அந்நிய நாட்டவர்களை உட்படுத்தியவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் 54 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
புதிதாக மரணம் இல்லை; மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கின்றது.
நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் உள்ள அனைத்து முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும் முன் இருந்ததைப் போல் மீண்டும் வழக்கம் போல் செயல்பட அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஆயினும் வழிபாட்டுத் தளங்களின் அளவைப் பொருத்து மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதோடு அரசாங்கம் பொதுவில் அனுமதி கொடுத்திருந்தாலும், மாநில அரசாங்கங்களின் அனுமதியும் அவசியம் என்றாரவர்.
அதே சமயம், நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOP தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், கூட்டரசு பிரதேசத்தில், பச்சை மண்டலங்களில் உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும், surauகளும் செயல்படலாம் என அமைச்சர் அறிவித்தார்.
ஆயினும் அவற்றின் அளவைப் பொருத்து, மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சுகாதார அமைச்சு வீடு வீடாகச் சென்று Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை சேவையை வழங்கவில்லை.
அப்படியே இருந்தாலும், அது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படும் என தற்காப்பு அமைச்சர் Dato' Sri Ismail Sabri Yaakob விளக்கினார்.
“Apa yang berlaku ini adalah kes tipu, maknanya van pun tipu, tindakan mereka tu semuanya adalah tipu"
எனவே யாரிடமும் ஏமாறாமல் கவனமாக இருக்குமாறும், சந்தேகப்படும்படியாக இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பிடம் புகார் கொடுக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள், தாயகம் திரும்ப மூன்று நாட்களுக்கு முன் தாங்கள் இருக்கும் நாடுகளிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன் மூலம், விமான நிலையங்களில் தங்களது மருத்துவ முடிவுகளைத் தெரிந்து கொள்ள அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மழலையர் பள்ளிகள், பாலர் பள்ளிகள், tadika ஆகியவற்றை மீண்டும் திறப்பது குறித்து கல்வியமைச்சு விரைவில் அறிவிக்கும்.
அவை ஜூலை முதல் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Alor Setar, Padang Hangங்கில் நெகிரி செம்பிலானில் இருந்து திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறாருக்கு Covid-19 தொற்றியிருப்பதாகக் கூறப்படுவதை கெடா சுகாதாரத் துறை மறுத்துள்ளது.
உண்மையில், கெடாவுக்கு உறவினரைக் காண வந்திருந்த நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சமயப் பள்ளி மாணவருக்குத்தான் அத்தொற்று இருப்பதாக அது விளக்கியது.
உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் வேலை இல்லாமல் திண்டாடியவர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடு அதிகரித்து சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாகப் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரத்துறை கூறியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த அக்காலக் கட்டத்தில் பல துறைகள் பேரளவில் மூடப்பட்டதே அதற்குக் காரணம் என அத்துறை விளக்கியது.
பினாங்கு மாநிலத்தில் சிகை திருத்தும் சேவைக்கு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயின் கீழ் கூடுதல் செலவினத்தை சிகை திருத்தும் நிலையங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather