← Back to list
JPJ முகப்புகள் திறக்கப்படுகின்றன!
Jun 14, 2020
நாளை தொடங்கி நாட்டிலுள்ள அனைத்து சாலை போக்குவரத்து துறைகளின் கட்டணd முகப்புகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
எனவே பொது மக்கள் போக்குவரத்து சம்மன்களை சரி பார்த்தல், கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் ஆவண ஒப்படைப்பு வேலைகளை மேற்கொள்ளலாம் என Bukit Amanநின் சாலை போக்குவரத்து மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்தது.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி தொடங்கி மதியம் 2 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி தொடங்கி நன்பகல் மணி 12 வரையிலும் அம்முகப்புகள் திறந்திருக்கும்.
மேல் விவரங்களுக்கு jpj.gov.my.
______
நாளை தொடங்கி நாட்டின் Covid-19 நிலவரங்கள் பற்றிய, சுகாதார அமைச்சின் தினசரி செய்தியாளர் சந்திப்பு நடைபெறாது!
எனினும் நிலவரங்களைப் பொறுத்து அச்சந்திப்பு அவ்வப்போது நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய நிலவரங்களை உடனுக்குடன் அமைச்சின் அதிகார்தப்பூர்வ அகப்பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
________
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே கூடல் இடைவெளி பின்பற்றப்படுவது சற்று கடினமான ஒன்று!
குறிப்பாக ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாது என ஆசிரியர்கள் கருதுவதாக FMT தகவல் கூறுகின்றது.
எனவே பள்ளிகள் மீண்டும் திறந்தால், அம்மூன்று வகுப்புகளுக்கும் தலா இரு ஆசிரியர்கள் வழங்கப்பட்டால் தான் மாணவர்களிடையே கூடல் இடைவெளியை உறுதிபடுத்தப்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
____________
Covid-19நுக்கான screening பரிசோதனை எந்தெந்த மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நடத்தப்படுகின்றது என்பதை பொது மக்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் தொடர்பான ஆவணங்களை உட்படுத்திய மோசடிச் சம்பவங்கள் நிகழாதிருக்க அது உதவும் என சுகாதார அமைச்சு வலியுறுத்துகின்றது.
முன்னதாக வெளிநாட்டவர்கள் சிலருக்கு போலி Screening ஆவணங்கள் விநியோகித்ததன் பெயரில் ஐந்து வங்காளதேசத்தினர் கைதாகியுள்ளனர்.
______________
இந்தியாவில் கால்நடைகள் துன்புருத்தி கொல்லப்படும் சம்பவங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
ஆகக் கடைசியாத் தமிழகத்தில் காளை மாடொன்றை இரு வாலிபர்கள் துன்புறுத்தியதில், தப்பியோடு முயன்ற அக்காலை மரக்கிளையில் மோது, கொம்புகள் உடைந்து படுகாயங்களுடன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து இந்த கோரச்செயலுக்குக் காரணமான சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather