← Back to list
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தொட்டது!
Jan 11, 2024
இன்று காலையிலிருந்து வெள்ள நிலவரம் தனிந்து வருகிறது!
ஆகக் கடைசி தகவல்படி ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துத் தொன்னூராகக் குறைந்துள்ளது.
இன்று காலை அவ்வெண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகமாக இருந்தது.
பஹாங்கில் ஆயிரத்து ஐநூரு பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
--------
பினாங்கில் பிரதான நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் குழாய்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன!
பாதிக்கப்பட்ட இடங்களில் நீர் விநியோகம் கட்டங்கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பி வருவதாக, அம்மாநில நீர் விநியோக அமைப்பு கூறியது.
அட்டவணையிடப்பட்ட அந்த நீர் விநியோகத்தடையால் பினாங்கு முழுவதும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
-------
கால்பந்து சங்கம் ஒன்றை உட்படுத்திய 60 லட்சம் ரிங்கிட் கையூட்டு விவகாரம் தொடர்பில் கெடா Menteri Besar, Datuk Seri Muhammad Sanusi Md Norரை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரித்துள்ளது.
இவ்விவகாரத்தில் மாநில அரசு மற்றும் கால்பந்து சங்கத்தின் உயர்மட்ட தலைவர்களின் தலையீடு இருப்பதாக MACC-யின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-------
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razakகின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்து அமைச்சரவையில் கலந்துப் பேசப்படவில்லை!
அது முழுக்க முழுக்க அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது என ஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.
-------
Merdeka அரங்கம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மீண்டும் திறக்கப்படவிருக்கிறது!
மறுசீரமைப்புப் பணிகளுக்காக 2016ஆம் ஆண்டு முதல் அவ்வரங்கம் மூடியிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather