← Back to list
பேரளவிலான COVID-19 பரிசோதனை!
Nov 23, 2020
அந்நிய நாட்டு தொழிலாளர்களை உட்படுத்தி பேரளவிலான COVID-19 பரிசோதனைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கையை, மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது.
எனினும், அப்பரிசோதனைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய சில SOPகள் மறுபரிசீலனை செய்யப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அச்சங்கம் கூறியது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சபா, KL, Labuan ஆகியப் பகுதிகளில் அனைத்து துறைச் சார்ந்த அந்நிய நாட்டுத் தொழிலாளர்களும், SWAB பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதை அச்சங்கம் சுட்டிக் காட்டியது.
அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் அத்தொற்றுப் பரவலுக்கான ஆபத்து அதிகம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.
சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!
நாட்டில் ஆகக் கடைசியாகப் பதிவான COVID-19 சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.
ஆயிரத்து 96 புதிய சம்பவங்களில், 603 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் கெடாவை உட்படுத்தி, 3 புதிய COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டதாகவும், Dr Noor Hisham சொன்னார்.
நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 104 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில் டிசம்பரில் தொடங்கும் தடுப்பூசித் திட்டம்!
அமெரிக்காவில், டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி, COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து, அப்பெருந்தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அடுத்தாண்டு மே மாத வாக்கில் மெல்ல வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக, அத்தடுப்பூசி திட்டத்திற்கான ஆலோசக மருத்துவர் CNNனிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், 95 விழுக்காடு ஆற்றல்மிக்கது எனக் கூறி, இரு மருந்தகங்கள் அங்கீகரித்துள்ள தடுப்பூசிகள் குறித்து, அமெரிக்க தடுப்பூசி நிபுணர்கள் டிசம்பர் 10ஆம் தேதி கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என தகவல் கூறுகிறது.
மலேசியாவில் வெங்காயப் பற்றாக்குறை!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தான், மலேசியாவில் வெங்காயக் கையிருப்பு குறைந்துள்ளதற்கு காரணம் என அரசாங்கம் கூறியிருக்கின்றது.
எனவே இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு, வெங்காய விலையை தேவையில்லாமல் உயர்த்த வேண்டாம் என, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு, வியாபாரிகளை எச்சரித்திருக்கின்றது.
இவ்வேளையில், இந்திய வெங்காய கையிருப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாட்டை கருத்தில் கொண்டு, பொறுமைக் காக்குமாறு அமைச்சு பயனீட்டாளர்களை அறிவுறுத்தியிருக்கின்றது.
சூழ்நிலை சரியாகும் வரை, தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா, மியன்மார், இந்தோனிசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தைப் பயனீட்டாளர்கள் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather