Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஆதாரம் கோரலாம்!

Jun 12, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 33 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் 103 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக ஒரு மரணம் ஏற்பட்டு மொத்த மரண எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.

KLலில் சிகை திருத்தும் ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்றியிருப்பதை சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr. Noor Hisham Abdullah உறுதிப்படுத்தியிருக்கிறார். 

அந்த அந்நிய நாட்டு ஆடவர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சேவை வழங்கியதாகவும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.

“Jumlah contact yg dikenalpasti adalah 40 org. Mereka telah disaring dan diarah untuk kuarantin di rumah.  Punca jangkitan belum dikenal pasti dan siasatan masih dijalankan”

சிகை திருத்தும் நிலையங்கள் அல்லது சிகையலங்கார நிலையங்களுக்குச் செல்வோர், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் Covid-19 பரிசோதனை மேற்கொண்டு விட்டார்களா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள உரிமையுண்டு.

அதற்கான ஆதாரத்தைப் பொதுமக்கள் கேட்கலாம். 

அவர்கள் ஆதாரத்தைத் தர மறுத்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புகார் கொடுக்கலாம் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மாநில எல்லைகளைக் கடப்போர், PLUS நெடுஞ்சாலைகளில் R&R பகுதிகளைப் பயன்படுத்தும் போது தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்ற வேண்டும்.

R&R பகுதிகளில் உணவுக் கடைகள், கழிவறைகள், surauகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

ஆயினும் சிறார்கள் விளையாடும் பூங்காக்கள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. 

கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள் ஆகியவற்றை நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.

அதன் தொடர்பிலான தர செயல்பாட்டு நடைமுறை SOP கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும்.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCOவின் கீழ், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களில் மேலும் அதிகமான தளர்வுகளை வழங்கும் பரிந்துரை குறித்து அரசாங்கம் விவாதிக்கவிருக்கிறது.

அடுத்த வார வாக்கில் அது குறித்து பேசப்படலாம்.

KTM நிறுவனத்தின் Skypark Link மற்றும் shutte Tebrau சேவைகளைத் தவிர்த்து அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல் எல்லா இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றி செயல்படத் தொடங்கியுள்ளன.

ரயில் சேவைகள் கட்டங் கட்டமாக அதிகரிக்கப்படும் என KTMB தெரிவித்தது.

ரயில் நிலையங்களில் கிருமி நாசினித் திரவங்கள் வைக்கப்பட்டிருக்கும்; பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும்.

அதோடு பயணிகள் எந்நேரமும் சுவாசக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருள் விலை 8 சென் அதிகரித்து RON95 லிட்டருக்கு 1 ரிங்கிட் 56 சென்னுக்கும் RON97 1 ரிங்கிட் 86 சென்னுக்கும் விற்கப்படும். 

டீசல் 10 சென் உயர்ந்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 73 சென்னாகிறது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather