Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

2 மாதங்களுக்குப் பிறகு கூடியது மக்களவை!

Jul 13, 2020


மீண்டும் தொடங்கியது மக்களவைக் கூட்டம்!

கிட்டத்தட்ட 2 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மக்களவை இன்று மீண்டும் கூடும் போது விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய பக்காத்தான் ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட சபாநாயகரையும் துணை சபாநாயகர்களில் ஒருவரையும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படவிருப்பதே அதற்கு காரணம்.

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கொண்டு வரவுள்ள அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக எதிர்கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால், கடும் விவாதங்களுக்கு இன்றைய முதல் நாளில் பஞ்சமிருக்காது எனலாம்.   

மார்ச் மாதம் Putrajaya-வில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தப் பின், Perikatan Nasional அரசாங்கத்தின் கீழ் முழுமையான மக்களவைக் கூட்டம் நடைபெறுவதே இதுவே முதன் முறையாகும்.

ஏற்கனவே ஒரு முறை, மே 18ஆம் தேதி மக்களவைக்  கூடியது; எனினும், COVID-19 பரவல் காரணமாக அக்கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்டது.


COVID-19: சரவாக்கில் புதிய cluster!

சரவாக் Kuching-கில், பொறியியல் நிறுவனத்தை உட்படுத்திய COVID-19 புதிய cluster சம்பவம் உருவாகியிருக்கின்றது.

இதுவரை இருவருக்கு அக்கிருமித் தொற்றுப் பீடித்துள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 32 பேர் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவங்களையும் சேர்த்து, நாட்டில் நேற்றுப் புதிதாக 14 கொரோனா சம்பங்கள் பதிவாகியுள்ளன. நால்வர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இன்னும் ஏறக்குறைய 77 மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


பாலிவூட் குடும்பத்தில் கொரோனாப் பரவல்!

Bolloywood நட்சத்திரம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனை அடுத்து அமிதாப்பின் மருமகளும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு அத்தொற்று இல்லை; அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல் கூறுகின்றது.

மேலும் சில உள்நாட்டு தகவல்கள்.....


வீட்டில் இருந்தே வேலை!

பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் புதிய வழமையை தொடருவது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகின்றது.

அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, உற்பத்தித் திறனில் குறைந்தளவிலான தாக்கம் மட்டுமே ஏற்பட்டதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் கூறியிருக்கின்றார்.

இருந்த போதிலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை முழுமையப் பெறுவதை உறுதிச் செய்ய அதற்கு இன்னும் விரிவான ஆய்வுத் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இலக்கயியல் தொழில்நுட்ப ஆதரவு, தகவல் பாதுகாப்பு, சட்டரீதியான விளைவுகள் ஆகிய அம்சங்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது என்றாரவர்.


சலவை இயந்திரத்தினுள் பூனைகள் வீசப்பட்ட சம்பவம்!

Kepong-கில் சுயச் சேவை சலவைக் கடையில், மூன்றுப் பூனைகளை சலவை இயந்திரத்திற்குள் போட்டுக் கொன்றதாக நம்பப்படும் ஆடவனை காவல் துறை தேடி வருகின்றது.

ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில், Gombak-கில் இதே போன்று ஓர் சம்பவம் நிகழ்ந்து, அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர்களுக்கு முறையே 34 மாதங்கள், ஈராண்டுகள் சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather