Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சீனப் பெருநாள் வானிலை நிலவரம் !

Feb 16, 2026


சீனப் பெருநாள் வானிலை நிலவரம் !

சீனப் பெருநாளான நாளை காலை, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வானிலை சீராக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ! 

ஆனால் ஜொகூர், சபா மற்றும் சரவாக்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என Met Malaysia கூறியது. 

பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், தீபகற்ப மாநிலங்களின் மத்திய மற்றும் தென் பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

புதன்கிழமை காலை, பஹாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக்கில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் ; மாலை வேளையிலும் அந்நிலை தொடரும் என Met Malaysia கணித்துள்ளது. 

---------- 

இதனிடையே, நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற விதிமுறை, சீனப் புத்தாண்டுக்கு மட்டும் அல்ல ; அனைத்து கொண்டாட்டங்களுக்குமே தான் என கோலாலம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது ! 

இது, பிறரைத் தொந்தரவு செய்யாமல், பொது ஒழுங்கை பேணுவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறையாகும் என அத்துறை கூறியது.  

முன்னதாக, சீனப் புத்தாண்டின் போது, ‘Pop-Pop’ மற்றும் ‘Happy Boom’ என்ற இரண்டு வகை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.  

--------- 

பேராக் ஜெலாபாங்கில், உயிரிழப்பை உட்படுத்திய சாலை விபத்து நிகழ்ந்த இடத்துக்கு, Ambulance வண்டி தாமதமாக வந்ததற்கு, ஆரம்பத்தில் அவசர உதவி அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தவறான, சம்பவம் நிகழ்ந்த இடம் குறித்த தகவல்களே காரணம் என, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது ! 

கடந்த வாரம் நிகழ்ந்த அவ்விபத்தில், மூன்று வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. 

---------- 

சிலாங்கூர் ஷா அலாமில், MPV வாகனம் மீது மரமொன்று வேரோடு சாய்ந்ததில், இரண்டு பெண்கள் பலத்த காயங்களோடு உயிர் தப்பினர் ! 

--------- 

ஆஸ்திரேலியா போண்டி கடற்கரையில், பெரியளவில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக பேர்வழி, இன்று வீடியோ வழியாக நீதிமன்றத்தில் ஆஜரானார் !  

அச்சந்தேக பேர்வழி, தனது தந்தை Sajid-டுடன், கடந்த டிசம்பர் மாதம், ஹனுக்கா விழாவில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.   

தாக்குதல் நடைபெற்றபோது, Sajid காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

அச்சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us