Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பயன்படுத்தாத SARA தொகை மறுவிநியோகம் செய்யப்படும் !

Feb 05, 2026


பயன்படுத்தாத sara தொகை மறுவிநியோகம் செய்யப்படும் !

 
மலேசியர்கள் இன்று தொடங்கி 100 ரிங்கிட் SARA உதவித் தொகைக்கான தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.

ஒரு முறை வழங்கப்படும் அந்த உதவித் தொகையானது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என 22 மில்லியன் மக்களுக்கு பலனளிக்கும். 

அந்த நூறு ரிங்கிட் உதவித் தொகை, வரும் திங்கட்கிழமை முதல் MyKad வழி விநியோகிக்கப்படும் என  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

-- 

இவ்வேளையில், கடந்தாண்டுக்கான SARA உதவித் திட்டத்தில் 150 மில்லியன் ரிங்கிட் தொகை யாராலும் செலவிடப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருந்தது ! 

அத்தொகையைக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளின் மருத்துவ வசதிகளுக்கு என நான்கு பிரிவினருக்கு மறுவிநியோகம் செய்யப் போவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  

-- 

இதனிடையே, SARA உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் பட்டியலில்,  காய்கறி, இறைச்சி போன்ற உணவுப் பொருட்களைச் சேர்ப்பது குறித்து கூடுதல் ஆய்வு மேற்கொள்ளப்படும் ! 

உறைய வைத்த உணவு பொருட்களைப் பட்டியலில் சேர்ப்பதை விட, அவற்றின் தரம் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது அவசியம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

-- 

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கனரக வாகனங்களின் ஓட்டம் தடை செய்யப்படுவதாக சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  

பெருநாள் காலங்களில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலைப் பயனர்களுக்கு சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும்  அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 14 முதல் 15 வரையிலும், பிப்ரவரி 21 முதல் 22 வரையிலும் அத்தடை அமலில் இருக்கும். 

-- 

சிலாங்கூர் காஜாங்கில், கடந்த வெள்ளிக்கிழமை தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயார் மீது பெட்ரோல் வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 40 வயதுடைய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 

அச்சம்பவத்தில், பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டதோடு, சந்தேகநபர் வீடு மற்றும் காரை எரித்து சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

-- 

 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us