← Back to list
நல்லுறவில் விரிசல் ஏற்படுத்த வேண்டாம் !
Feb 04, 2026

மலேசியா இந்தோனேசியா எல்லைகளை நிர்ணயிப்பது, இழப்பீடு அல்லது லாப நஷ்ட அடிப்படையில் அல்ல !
அது, அனைத்துலக ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவுச் செய்யப்படுவதாக பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மலேசியா 5,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை இந்தோனேசியாவிற்கு இழப்பீடு முறையில், கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் பிரதமர் மறுத்துள்ளார்.
இரு நாடுகளும் 1915-ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தால் கட்டுப்பட்டுள்ளன.
எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு கூற்றையும் வெளியிடுவதில் அனைத்து தரப்பினரும் கவனமாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
--
ஜொகூர் பாரு கங்கார் பூலாயில், எரிந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எலும்புக்கூடுகள் குறித்த ரசாயன, மருத்துவ மற்றும் குற்றவியல் அறிக்கைகளைக் காவல் துறை தயார் செய்து வருகிறது.
அவ்வறிக்கை குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தயாராகிவிடும் என அத்துறை சொன்னது.
முன்னதாக, அந்த எரிந்த வீட்டில் இருந்த ஆடவர் ஒருவரை கொலைச் செய்ததாகக் கூறி இரு சகோதரர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
--
சிலாங்கூரில், அண்மையில் பந்திங் மற்றும் தாமான் வங்சாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் காவல் துறை அடையாளம் கண்டுள்ளது.
என்றாலும், விசாரணைகளின் நுணுக்கங்களைப் பாதிப்புறச் செய்ய வேண்டாம் என அது, கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.
--
ஈப்போவில் கடந்த மாதம் உணவகம் ஒன்றில், மூன்று குழந்தைகளுக்கு தாயான தனித்து வாழும் தாயார் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதால் குறைந்தபட்ச தண்டனைக் கோரப்பட்டது.
--
கெடா அலோர் ஸ்டாரரில் தனது தாயைக் கொலைச் செய்ததாக நம்பப்படும் ஆடவர் கடன் பிரச்சினையிலும் நிதி நெருக்கடியிலும் இருந்தது தான் காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
29 வயதான சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather