← Back to list
ண்டும் தாய் வீட்டுக்கு திரும்புகிறார் முருகன் !
Feb 02, 2026

ரமலான் buffets உணவு செலவுகளில் மக்கள், தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும் என FOMCA நினைவூட்டியுள்ளது !
இத்தகைய buffets சேவைகள் அத்தியாவசிய சேவைகள் அல்ல, எனவே வணிக நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி விலையை நிர்ணயிக்கலாம்; எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.
ஆனால், விலை நிர்ணயிக்கும் போது உணவின் தரம் அதற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று FOMCA வலியுறுத்தியுள்ளது.
உணவின் தரம் குறித்து அதிருப்தி இருந்தால், மக்கள் உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவீன அமைச்சிடம் புகார் அளிக்கலாம்.
சில வணிக நிறுவனங்கள், ஒருவருக்கு 300 ரிங்கிட்டுக்கும் மேல்,
buffets சலுகைகளை வழங்கி வருகின்றன.
----------
முருகப் பெருமான் பத்துமலை இருந்து, கோலாலம்பூரில் உள்ள தாய் கோவிலை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கின்றார் !
தைப்பூசத் திருவிழா இனிதே நிறைவடைந்த வேளை, சேவற்கொடி இறக்கப்பட்டு, இன்று மாலை 4 மணி வாக்கில், முருகப் பெருமான், வள்ளி தெய்வானை சமேதராய், வெள்ளி ரதத்தில் எழுந்தளுளி மேள தாளங்கள் முழங்க, கோலாட்ட நடனங்களுடன் வீதி உலா செல்கின்றார்.
பக்தர்கள் புடைசூழ, தாய் கோவிலை நோக்கிய ரத புறப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வெள்ளி ரதம் விடியற்காலை 3 அல்லது 4 மணியளவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
-----------
இதனிடையே, பினாங்கு தண்ணீர்மலை தைப்பூசத்தின் போது, பல்லூன் வெடிப்புக்குக் காரணமான வெளிநாட்டவர், உரிமம் இல்லாமல் வணிகம் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது !
அச்சம்பவத்தில், பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் இருவர் காயங்களுக்கு இலக்காகினர்.
அதன் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
---------
உள்நாட்டு வருவாய் வாரியம், 14-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்த வேண்டிய குடியிருப்பாளர்களைக் கண்டறிந்துள்ளது !
அந்த நபர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் சேர்த்து பார்த்தால், 10 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பணம் இருப்பதை அவ்வாரியம் கண்டுபிடித்துள்ளது.
ஆனால், அவர்கள் தங்கள் வருமான வரி அறிக்கை படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என LHDN கூறியது.
----------
ஜொகூரில் நேற்று மாலை தொடங்கி அதிகாலை 1 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சாலை தடுப்புச் சோதனையில், 247 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather