← Back to list
காளியம்மன் கோவிலுக்கான மாற்று இடம் தயார் !
Jan 19, 2026

தலைநகர் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம், இப்போது தயாராக உள்ளது !
கூட்டரசு பிரதேச அமைச்சர் Hannah Yeoh அதனை தெரிவித்துள்ளார்.
மடானி பள்ளிவாசல் திட்டத்திற்காக, அவ்வாலயம் மாற்றும் பணிகள், சட்டத்தின் அடிப்படையில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்தையும் அனைத்து தரப்பினரின் மத நடைமுறைகளின் தொடர்ச்சியையும் உறுதி செய்ய ஏதுவாக, அரசாங்கம் தேவையான ஒப்புதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளது.
---------
ஊழலை ஒழிப்பதில் அனைவரின் பங்கும் உண்டு என்கிறார், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் !
MACC போன்ற அதிகாரிகள், ஊழல் செய்தவர்களை, அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் கூறினார்.
அண்மைய இராணுவ கொள்முதல் குத்தகை ஊழல் போன்ற விவகாரங்கள், பெரிய பிரச்சினையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே; பல பகுதிகளில் இன்னும் நிறையவே உண்டு, என்றாரவர்.
---------
சமூக ஊடக பிரபலங்கள், தங்களின் அனைத்து வருமானத்தையும் அறிவிக்க வேண்டும் என உள்நாட்டு வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது !
பரிசுகள், பொருள் விளம்பரம் செய்ய இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் ஆகியவை சேர்த்தே, அதில் கணக்கிடப்பட வேண்டும்.
-----------
மலாக்கா மாநில அரசு ஊழியர்கள், பிப்ரவரி 17 முதல் 6 நாட்களுக்கு, விடுமுறையை அனுபவிப்பர் !
பிப்ரவரி 17, 18 சீனப் புத்தாண்டு பொது விடுப்பும், 19-ஆம் தேதி ரமலாம் நோன்பு மாத தொடக்கத்தின் சிறப்பு விடுப்பும், 20-ஆம் தேதி சுதந்திர பிரகடன விடுப்பும் வழங்கப்படுவதே அதற்குக் காரணம் ; பிப்ரவரி 21, 22, வழக்கமான வாரக் கடைசி விடுப்பாகும் !
----------
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி, Rapid on Demand சேவையை அனுபவிக்கும் பயணிகள், 2 ரிங்கிட் செலுத்த வேண்டும் என Prasarana தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather