← Back to list
ஒற்றுமை பொங்கல் விழா !
Jan 15, 2026

இன்று பொங்கல் நாடு முழுவதும் ஆலயங்களிலும், வீடுகளிலும், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது !
கோலாலம்பூரில் முக்கியமாக, ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானதுக்கு உட்பட்ட மூன்று ஆலயங்களிலும், வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் பத்துமலையில், இன்று நண்பகல் பொங்கல் வைக்கப்பட்டது.
அதில் அதிகமான பக்தர்களும், சுற்றுப்பயணிகளும் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில், நாளை மறுநாள் பத்துமலை வளாகத்தில் ஒற்றுமை பொங்கல் எனும், பெரிய விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தேவாஸ்தான அறங்காவலரும், மஹிமா தலைவருமான டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்துள்ளார்.
அவ்விழாவில், தோரணம் பின்னுதல், பூ கட்டுதல், உரி அடித்தல் உள்ளிட்ட, நிறைய பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிவகுமார் கூறினார்.
அவ்விழாவிற்கு அனைத்து பக்தர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
-------------
சமூக ஊடக பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயதை 16-ஆக நிர்ணயிக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து வருகின்றன.
அதில், அனைத்து சமூக ஊடக சேவை வழங்குநர்களும், மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமும் இணைந்து செயல்பட்டு வருவதாக Datuk Fahmi Fadzil கூறினார்.
கடப்பிதழ், MyKad அடையாள அட்டை மற்றும் MyDigital ID மூலம் அடையாளச் சரிபார்ப்பு செய்து, தவறான உள்ளடக்கங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதே அம்முயற்சியின் நோக்கம் என அவர் சொன்னார்.
அதோடு, பெற்றோர்களும் பிள்ளைகளின் சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
---------
பேராக், சிலாங்கூர், நெகெரி செம்பிலான், மற்றும் சபா சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இரவு மணி 8 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய அவானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather