← Back to list
'Geng Rames' மீது குற்றம் சாட்டப்பட்டது !
Dec 30, 2025

கெடா மற்றும் பினாங்கில் பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்ததாக நம்பப்படும், 'Geng Rames' கும்பல் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது !
கைதான 20 பேரும், 24 முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள்.
குற்றச்சாட்டுகள் தமிழில் வாசிக்கப்பட்டன, ஆனால், வாக்குமூலங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாத நிலையில், ஜனவரி 29 ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது.
ஐந்து ஆண்டுகளாக பல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வந்த அக்கும்பலை அண்மையில் கைதானதாக , புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம் குமார் நேற்று கூறியிருந்தார்.
--
நெகிரி செம்பிலான், போர்டிக்சனில், ஆயுதமேந்திய கைக்கலப்பில் ஈட்டுப்பட்டதாக நம்பப்படும் ஒன்பது பேரை காவல் துறை கைதுச் செய்துள்ளது.
அச்சம்பவத்தில் காயமடைந்த குழந்தை ஒன்று உட்பட, நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, நீலாயில், கடந்த 22 ஆம் தேதி, ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
62 வயதான சந்தேக நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் வாக்குமூலம் பெற காத்திருப்பதாகவும் சொன்னது.
--
எதிர்கட்சிக் கூட்டணியான Perikatan Nasional தலைவர் பொறுப்பில் இருந்து Tan Sri Muhyiddin Yassin விலகியுள்ளதை அடுத்து, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து Datuk Seri Azmin Ali-யும் விலகியுள்ளார்.
இந்நிலையில் பெரிக்காத்தானுக்குத் தலைமையேற்க பாஸ் கட்சி முன்வந்துள்ளது.
--
புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, RapidKL ரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை அச்சேவை ்நீடிக்கும்.
இதனிடையே, BRT Sunway சேவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களிலும், Rapid KL On-Demand சேவைகளும் அதிகாலை 2.30 மணி வரை இயங்கும்.
--
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் Khaleda Zia உடல்நலக் குறைவால் இன்று தனது என்பதாவது வயதில் காலமானார்!
வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர், முஸ்லீம் நாடுகளின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளுக்கு கலீடா சொந்தக்காரர் ஆவார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather