← Back to list
மலேசியர்களுக்கு திறந்த கடிதம் !
Dec 27, 2025

1MDB வழக்கில் 15 ஆண்டு சிறை மற்றும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மலேசிய மக்களுக்கு திறந்த கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், அவரது போராட்டம் தனிப்பட்ட விரோதம் அல்ல, மாறாக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அமைதியாகவும் விவேகத்துடன் சிந்தித்துச் செயல்படவும், நாட்டின் பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
நேற்று நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவரது வழக்கறிஞரால் அக்கடிதம் வாசிக்கப்பட்டது.
பின்னர், முன்னாள் பிரதமரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் அது பதிவேற்றப்பட்டது.
--
இதனிடையே, 1MDB வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிர்ச்சி அடையவில்லை என டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
1MDB வழக்கில் நேற்று, அந்த முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டு சிறை மற்றும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
--
செயற்கை நுண்ணறிவை இலக்கவியல் கல்வியறிவுடன் இணைக்க வேண்டும் !
அது, தவறான தகவல் பரிமாற்றங்களைத் தடுக்க வகை செய்யும் என தொடர்பு துறை அமைச்சர் டத்தோ Fahmi Fadzil வலியுறுத்தினார்.
தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஊடக விழிப்புணர்வு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
--
தாய்லாந்து நேற்று கம்போடிய மீது வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியதாக தகவல் வெளிவந்துள்ளன.
அம்மோதலில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
--
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று காலை மணி 8.22-க்கு, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும், மலேசியவிற்கு சுனாமி எச்சரிக்கை ஏதுமில்லை என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather