← Back to list
பஹாங் வெள்ளம் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது !
Dec 18, 2025

பஹாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், வெள்ள நிர்வாக நடவடிக்கைகள் சீராக நடைபெற்று வருவதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார் !
அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அம்மாநிலத்தில் வெள்ளத்தால் 11-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், திரங்கானுவில் கிட்டத்தட்ட 600 பேரும், ஜொகூரில் 350 பேரும், கிளந்தானில், 140 பேரும், PPS மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
--------
மற்றொரு பக்கம், மலேசியர்கள், தாய்லாந்து Hatyai-க்கான பயணங்களை ஒத்திவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
பெருவெள்ளம் இன்னும் வடியவில்லை என்பதால், அங்குள்ள மலேசிய தூதரகம் அவ்வாறு அறிவுறுத்தியது.
---------
அடுத்தாண்டு 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு இருக்காது என அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார் !
இந்த முடிவால் ஏற்படும் செலவுகளை, அரசாங்கம் ஏற்கும் என்றும், அது தொடர்பான மேலதிக விவரங்களை, பொதுப் பணித்துறை அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
---------
மலாக்கா டுரியான் துங்காலில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டு விட்டதற்காக, அதில் குற்றவியல் அம்சங்கள் உள்ளன என பொருள்படாது !
எனவே, யூகங்களைப் பரப்பி விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம் என சட்டத்துறை அலுவலகம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
----------
சிலாங்கூர் கிள்ளான் Taman Sentosa-வில் நிகழ்ந்த கைகலப்பில், 34 வயது ஆடவர் பாராங் கத்தியால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், காவல்நிலையத்தை அணுகும்படி, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather