← Back to list
நாட்டில் ஒரு நாளைக்குச் சுமார் 18 பேர் திவாலாகிறார்கள் !
Dec 09, 2025

நாட்டில் ஒரு நாளைக்குச் சுமார் 18 பேர் திவாலானவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
அதில் அறுபது விழுக்காட்டினர் முப்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என செனட்டர் சிவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலையில்லா திண்டாட்டம், எளிதான முறையில் கடன் பெறுவது ஆகியவை அதற்கான முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.
பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள், கல்வி அமைப்பில் இருக்கும் குறைப்பாடுகள் போன்ற பிரச்சினைகளை அரசாங்கம் முதலில் சரிசெய்ய வேண்டும் என சிவராஜ் வலியுறுத்தினார்.
--
காணாமல் போன MH370 விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு, சீனாவைச் சேர்ந்த 8 பயணிகளை உட்படுத்திய எட்டு வழக்குகளுக்கானது.
தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 78 வழக்குகளில், 23 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன; 47 வழக்குகள் தீர்க்கப்பட்டு அப்போதே, மீட்டுக்கொள்ளப்பட்டன.
2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் 239 பேருடன் MH 370 விமானம் காணாமல் போனது.
--
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஜாலான் கூச்சிங் பகுதிகளில் நிகழ்த்திய சிறப்பு சோதனையில், போலிக் கடப்பிதழ் பயன்படுத்திய மலேசிய நாட்டவர் ஒருவர் கைதாகியுள்ளார்.
போலி தகவல்களைக் கொண்டிருந்த இந்திய கடப்பிதழை அவர் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அவரோடு இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக, குடிநுழைவுத் துறை கூறியது.
--
ஜப்பான் வடகிழக்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதனால், சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அச்சம்பவத்தில், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், 23 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
--
இந்தோனேசியா, சுமத்ராவில் ஏற்பட்ட பேரிடர் நிலைமை மிகவும் மோசமானதாக விவரிக்கப்படுகிறது.
14 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு போதுமான உதவிகள் இன்னும் கிடைக்கப்பெறாமல் இருப்பதை மேற்கோள் காட்டி அவ்வாறு கூறப்படுகிறது.
அப்பேரிடரில், சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்; 234 பேர் காணாமல் போயுள்ளனர்.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather