← Back to list
தேசியக் கூட்டணி கட்சியில் சேரவுள்ளது, மஇகா !!
Dec 01, 2025

தேசியக் கூட்டணி கட்சி Perikatan Nasional-ல் சேர மஇகா விண்ணப்பித்துள்ளது!
அக்கூட்டணியின் தலைவர் Tan Sri Muhyiddin Yassin, அதனை தெரிவித்துள்ளார்.
அந்த விண்ணப்பம் விரைவில் PN-ன் உயர் மட்டக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.
கொள்கையளவில்,PN உள்ளடக்கிய அனைத்து கட்சிகளும் மஇகாவின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.
என்றாலும், உயர் மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என Muhyiddin சொன்னார்..
ஷாஆலமில் நடந்த உரிமை கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு டான்ஸ்ரீ மொஹைதின் இதனை அறிவித்தார்.
--
கெடா, சுங்கை பெதானியில், பள்ளியின் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட பகடிவதைச் சம்பவம் தொடர்பிலான விசாரணை நிறைவடைந்துள்ளது.
வழக்கு சட்ட துறை அலுவலகத்துக்கு, அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், 16 வயது மாணவன் ஒருவன், குழுவாக மயக்கம் அடையும் வரை தாக்கப்பட்டான்.
--
நாடு முழுவதும் வெள்ள நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது!
நேற்று 23 ஆயிரமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் Perlis மற்றும் பேராவாகும்.
--
இந்தோனேசியா, சுமத்ராவில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், 440-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
முன்னதாக, அந்த நிலச்சரிவில் 33 வயதுடைய மலேசியர் ஒருவர் காணாமல் போயிருப்பதை Wisma Putra உறுதிப்படுத்தியது.
--
Hong Kong-ல் கடந்த வாரம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
அவ்வெண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கத் தொடங்கியது.
--
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330ஐத் தாண்டியுள்ளது.
200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
அந்நாடு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான இயற்கை பேரிடரைச் சந்தித்துள்ளதாக அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather