← Back to list
பேரிடர் நிர்வாகக் குழுக்கள் தயாராக இருக்க உத்தரவு !
Nov 23, 2025

பருவமழை காலம், பல மாநிலங்களில் நிலவி வருவதை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள், விழிப்புடன் இருக்கும்படி, துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் !
வானிலை எச்சைக்கை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கும்படியும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கும்படியும், அவர் அறிவுறுத்தினார்.
Met Malaysia, பினாங்கு, கெடா உட்பட சில மாநிலங்களுக்கு நாளை வரையிலான கனமழை எச்சரிக்கையை முன்னதாக விடுத்திருந்தது.
----------
இவ்வேளையில், கிளாந்தானில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !
திரங்கானுவில் 353 பேரும், கெடா கூலிமில் 40 பேரும், வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
------------
ஆபத்து அவசர வேளைக்கு அழைக்கப்படும் 999 என்ற எண்ணில் எந்த மாற்றமும் இல்லை !
அது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது என சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம், புதிய அவசர அழைப்பு தளமான NG MERS 999 என்ற எண்ணை செயல்படுத்துவதற்கான, அனைத்து திருத்த நடவடிக்கைகளும், மக்களின் பாதுகாப்புக்காக, சரியான முறையில் மேற்கொள்ளப்படுவது உறுதிச் செய்யப்படும் என அமைச்சு சொன்னது.
----------
முற்போக்கான சம்பளக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 11 மாதங்களுக்குள், நாடு முழுவதும் 27-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர் !
இது திறன் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான ஊதிய முறையாகும்.
இந்தச் சம்பள முறை, தொழில்துறையினருக்கு வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-----------
Negeri Sembilan Sendayan-னில், ஆடவர் ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவர், வரும் புதன்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர் !
-----------
சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது !
அவ்வெண்ணிக்கையை ஐயாயிரமாக கட்டுப்படுத்த முன்னதாக உத்தரவிட்டிருந்த கேரள உயர்நீதிமன்றம், தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது.
முன்னதாக, சபரிமலையில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, மாது ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather